பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

இலங்கைக் காட்சிகள்

ரும் விழாவுக்கு வந்திருந்தார்கள். மண்டபத்திற்கு வந்து அமர்ந்ததும் என் கண்ணை ஓட்டினேன். அநேகமாக எல்லோருடைய நெற்றியிலும் பளிச்சென்று திரு நீறு இலங்கியது. கொழும்பிலும் நான் சந்தித்த தமிழன்பர்கள் திருநீற்றைத் தரித்திருந்தார்கள். பலர் ருத்திராட்ச மாலையை அணிந்திருந்தார்கள். சைவத்தின் இருப்பிடமாகிய தமிழ் நாட்டில் அவ்வளவு பக்தியை இப்போது காண முடியவில்லை.

உயரமான மேடையில் தலைவருக்கு ஆசனம் அமைத்திருந்தார்கள். அந்த இடத்தைச் சுற்றிலும் பிரமுகர்கள் வீற்றிருந்தார்கள். அருகில் மாவிலை தேங்காயுடன் நிறைகுடம் வைத்துத் திருவிளக்கு ஏற்றினார்கள். நம்முடைய நாட்டுப் பண்பை எவ்வளவு - நன்றாக மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.

"இலங்கையில் வெள்ளைக்காரருடைய நாகரிகத்தைப் பின்பற்றி அவர்களைப் போலவே பழக்க வழக்கங்களை உடையவர்கள் பலர் என்று முன்பு நண்பர்கள் சொல்லிக் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் இங்கே வந்து பார்த்தால் தமிழ் நாட்டைவிட அதிகமான பக்தியும் தமிழ்ப் - பண்பும் இருக்கின்றனவே!" என்று ஒரு நண்பரைக் கேட்டேன்.

"ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இப்போதும் சில குடும்பங்கள் அப்படி இருக்கின்றன. சிங்களவர்களிடம் ஆங்கில நாகரிக மோகம் அதிகம். தமிழர்கள் முன்பு அப்படி இருந்தாலும், இந்தியாவில் தேசீய உணர்ச்சி மிகுதியாகிக் காந்தீயம் பரவி இந்தியப் பண்பு மேலோங்கவே, இங்கும் அந்த எளிமை