கண்டி விழாக்கள்
61
"திரு ஜகந்நாதன் தமிழ் நாட்டில் நிலவும் உணவு நிலைமையைப் பற்றித் தெரிவித்த செய்திகளைப் பத்திரிகையில் பார்த்தேன். இந்தியா அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியும் பஞ்சத்தினின்று விடுதலை பெறவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். இந்திய அரசாங்கம் இந்தப் பஞ்சத்தை வளர விடாமல் தடுக்கத் தக்க முயற்சி செய்யவில்லை. அது கண்டிப்பதற்குரியது. பாரதியார், தனி ஒருவனுக்கு உணவிலை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடியிருக்கிறார். இவ்வளவு மக்கள் பட்டினியால் வாடும்படி செய்யும் அரசாங்கத்தை அழித்துவிடுவதுதான் நியாயம். பாரதியார் சொல்வதை நாம் உணர்ச்சியுடன் கவனிக்கவேண்டும்" என்று கனகரத்தினம் பேசினார்.
'அரசியல்காரர்கள் எந்த இடத்திலும் அரசியலைக் கலக்காமல் விடுவதில்லை என்ற நினைவுதான் எனக்குத் தோன்றியது. அவர் அவ்வளவு உணர்ச்சியோடு சொன்னதற்கு நான் விடையளித்திருக்கலாம். ஆனால் அரசியல் துறையில் நான் கலந்துகொள்வதில்லை. அயல் நாட்டில் பேசும் ஒவ்வொரு சொல்லும் நிதானத்துடன் வரவேண்டுமல்லவா? நல்ல வேளையாகத் தலைமையுரைக்குப் பிறகு பேசிய திரு தொண்டைமான் அவர்கள் கனகரத்தினத்திற்குச் சரியான விடையை அளித்தார். இருவரும் வெவ்வேறு கட்சிக்காரர்கள். ஆகவே அவர்கள் பேச்சுச் சொற் போராகவே இருந்தது. தொண்டைமான் பேசினர்: "தனி யொருவனுக்கு உணவிலையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியார் வாக்கை என் நண்பர் எடுத்துக் காட்டி, இந்திய அரசாங்கத்தைக் குறை