உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கண்டி விழாக்கள்

67

மாட்டான். பிறர்மீது வசைபாட மாட்டான். சுய நல எண்ணங்கள் இரா. மனிதர் துயர் தீர்க்கவே, புதுமை உலகத்தைச் சிருஷ்டிக்கவே, எழுத்தாளன் சதா முயலுவான்" என்று உணர்ச்சி வேகத்துடன் அவர் வெளுத்து வாங்கிவிட்டார். யாருக்கும் புரியும்படி நவரஸங்களும் ததும்பும் எளிய நடைப் பேச்சு அது...'

வீரகேசரி ஆசிரியர் நன்றாகத்தானே எழுதுகிறார்? அவர் எழுதும் மாதிரியைச் சொல்கிறேன். என்னைப் பற்றி அவர் எழுதியதைச் சொல்லவில்லை!