பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
அருவி ஓசை

ண்டி விழாக்கள் நிறைவேறின. அன்று இரவு கிரிமெட்டியாவுக்குச் சென்று தங்கினேன். மறுநாட் காலை எழுந்து தேயிலையைப் பாடம் பண்ணும் வகைகளை யெல்லாம் பார்த்தேன்.

இலங்கையிலே பல இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தோட்டத்திலும் பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிற் பெரும்பாலோர் தமிழர்கள். தமிழ்த் தொழிலாளர்கள் திறமையாகவும் அதிகமாகவும் வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தமிழ் மக்களுக்குள் மணம் நடத்த வேண்டுமானால் ஏதேனும் பொது இடத்தில் கூடி நடத்துவார்கள். கோயிலாக இருந்தால் எல்லோருக்கும் மிக்க திருப்தி உண்டாகும். அதனால் அங்கங்கே சில கோயில்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் போதிய அளவுக்குக் கோயில்கள் இல்லை. பல மைல் சுற்றுவட்டாரத்துக்கு இந்துக் கோயில்களே இல்லாமல் இருக்கும் பகுதிகளும் உண்டு.

கண்டியிலிருந்து பத்து மைல் தூரத்தில் உடுஸ்பத்தை என்ற ஊர் இருக்கிறது. அடர்ந்த காடுள்ள மலைப் பகுதியில் அந்த ஊர் அமைந்துள்ளது. அங்கே ஒரு கோயிலை ஓர் அன்பர் கட்டியிருக்கிருர். இலங்கையில் முருகன் கோயில்களே அதிகம். எல்லா முருக-