பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருவி ஓசை

71


காவி போர்த்து தலம்காட்டிக்
கவினும் ஈரம் காட்டிஉள்ளே
மேவும் முதலே இலங்கவைத்து
விளையும் அழுக்கை அகற்றிவரும்
ஆவி அனையாய், மாவலிகங்
கைப்பேர் கொண்ட அணியாறே,
பாவும் உன்னத் துறவரசாப்
பகர்ந்தால் ஏதும் பழுதுண்டோ?

பத்திரிகாசிரியர் கையில் ஏதாவது கிடைத்தால் சும்மா விட்டுவிடுவாரா? இதை வீரகேசரியில் வெளியிட்டுவிட்டார். அவர் அன்பை என்ன என்று சொல்வது "இயற்கை வனப்பைக் கண்டதும் அவர் கவி பாட ஆரம்பித்துவிடுகிறார். மாவலி கங்கையில் புது வெள்ளம் ஓடியது. இதைக் கண்டதும் ஒரு கவி பாடிவிட்டார். அந்த நதியைத் துறவிகளுக்கு அரசாகப் பாடிவிட்டார். அந்த ஆற்றிலே முதலையும் உண்டென்றேன். உடனே அதையும் வைத்து மற்றோர் பாட்டு!" என்று அவர் எழுதினார்.

மாவலிகங்கையின் சலசல ஓசையினிடையே எங்கள் சம்பாஷணையை நடத்திக்கொண்டே உடுஸ்பத்தையை அடைந்தோம். அது மலையில் சற்று உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இயற்கை யெழிலரசி தளதளவென்று அந்த இடத்தில் நின்று புன்முறுவல் பூக்கிறாள். உடுஸ்பத்தையில் இறங்கி நின்று நாலு பக்கமும் பார்த்தேன். மேடான பாறைப் பகுதியில் கதிரேசன் கோயில் அமைந்திருக்கிறது. எதிரே பள்ளத்தில் அருவி ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் சாலை. சாலையிலிருந்து பார்த்தால் அருவி கண்ணுக்குத் தெரியாது. இருமருங்கும் உள்ள மரச்செறிவு