பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருவி ஓசை

78

சுமந்து சந்தன மரத்தை உருட்டி மூங்கிலச் சாய்த்துத் தேனடைகளைச் சிதைத்துப் பலாச்சுளைகள் உதிர, சுரபுன்னை மலர் உதிர, குரங்குகள் பயப்பட, யானைகள் குளிர்ச்சி அடைய வீசி, யானைக் கொம்பையும் பொன் தாதுவையும் மணிகளையும் அலசிக்கொண்டு வருகிறதாம். "இழுமென இழிதரும் அருவி” என்று சொல்கிறார் நக்கீரர். அந்த 'இழும்' என்பதற்கு அர்த்தம் உடுஸ்பத்தையிலே தெரிந்துகொண்டேன். அருவி சலசலவென்று ஓடியதாகச் சொல்லலாம்; ஆனால் அதில் அழகில்லை, சோ என்று இரைந்ததாகச் சொல்லலாம்; அதில் அச்சம் தொனிக்கிறது. ஓம் என்று ஒலி எழுப்புவதாகச் சொல்லலாம்; ஓமுக்குப் பொருள் என்ன என்ற ஆராய்ச்சி ஏற்படும். புலவர் சொன்னபடி 'இழும் என்று' ஒலிக்கிறது என்பதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.

அருவியின் ஓசையோடு காதைப் பொருத்திக் கருத்தையும் இணைத்துச் சில கணம் நின்றேன். உலகமே மறந்துவிட்டது. உடன் வந்த அன்பர்கள் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனல் அந்தப் பேச்சு என் காதில் விழவில்லை. கசமுசவென்று பல பேர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கோயிலில் நாகசுரக்காரர் உச்சஸ்தாயியிலே ஒரு ராகத்தை ஆலாபனம் பண்ணுவதைக் கேட்டு அனுபவித்திருக்கிறவர்கள் இந்த அநுபவத்தை ஒருவாறு உணரக்கூடும். அங்கே ஜனங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனாலும் அந்தப் பேச்சையெல்லாம் அடக்கி மேலே மேலே ஏறிவரும் இசை வெள்ளத்தில் நம் கருத்து மிதக்கும் போது வேறு ஒலி காதிலே விழாது. உடுஸ்பத்தையில் அருவியின் ஒல்லொலியிலே நான் ஒன்றியபோது