பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

இலங்கைக் காட்சிகள்

அத்தகைய அநுபவந்தான் உண்டாயிற்று. அந்த அருவி இயற்கைத் தேவிக்குக் கட்டியம் கூறியது; அமைதியான முழு மோனத்தில் ஒலிக்கீற்றாக இசையெழுப்பியது. இரவில் எப்படி இருக்கும்? தாலாட்டுப் பாடுமா? அல்லது இரவிலே முழுச் சுறுசுறுப்புடன் கோலாகலமாக விளையாடும் காட்டு விலங்குகளின் முழக்கமாகிய சங்கீதத்துக்குச் சுருதி போடுமா? "அதோ பாருங்கள் ஒரு மலை" என்று என்னைத் தட்டி விழிக்கச் செய்து ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினர் கன்னையா ராஜு.

"ஒரு மலை என்ன? எங்கும் மலைதான்; எல்லாம் மலைதான்" என்றேன்.

"அதோ தெரிகிறதே. அந்த மலைக் காட்டிலே யானைகள் வேலை செய்கின்றன."

"என்ன வேலை?”

"கதிரேசனுடைய வேலை.”

"என்ன அது! கதிரேசன் வேலையா? விளக்கிச் சொல்லுங்கள்."

"இந்தக் கதிரேசப் பெருமானுடைய கோயிலுக்கு வேண்டிய மரங்கள் அந்த மலைக் காட்டிலிருந்து வருகின்றன. வெட்டின மரங்களை இழுத்து வரும் வேலையை யானைகள் செய்கின்றன.

"அப்படியா!"

நான் ஆச்சரியப்படுவதையன்றி வேறு என்ன செய்வேன் !

கோயிலிலிருக்கும் மேட்டு மேலே ஏறினோம். இந்தக் கோயிலை 1986-ஆம் வருஷம் கட்ட ஆரம்பித்-