புறப்பாடு
8
உள்ள பல வகைத் தொடர்புகளை இலக்கியத்தின் வாயிலாகவும் சரித்திரத்தின் வழியாகவும் தெரிந்து கொண்டிருந்தவன்தானே?
இராமாயணத்தில் காணும் இலங்கை, ஆற்றலுக்கும் செல்வத்துக்கும் உறைவிடம். மணிமேகலையில் இலங்கா தீபம் வருகிறது. மணிமேகலை இலங்கைக்குச் சென்று அங்குள்ள பல இடங்களைப் பார்த்தாளென்று தமிழ்க் காவியம் சொல்லுகிறது. சோழ பாண்டிய மன்னர்கள் இலங்கைக்குச் சென்றதும் இலங்கை யரசர்களுக்கு உதவியதும் ஆகிய பல செய்திகளைச் சரித்திரம் சொல்லுகிறது. புலவர்கள் பலர் இலங்கைக்குச் சென்று பரிசு பெற்று வந்த செய்திகளைப் பல தனிப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல பல நினைவுகள் இலங்கை என்ற போதே உள்ளத்தே தோன்றின.
செப்டம்பர் மாதம் நடக்கப்போகும் கூட்டத்துக்கு ஜூலை மாதமே ஏற்பாடு செய்யத் தொடங்கிவிட்டார், நண்பர். இலங்கை, தமிழ் நாட்டுக்கு மிகவும் சமீபத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் 16 மைல் தூரந்தான். அதைக் கடக்கக் கப்பலும் வான விமானமும் இருக்கின்றன. ஆனாலும் இலங்கைக்கு நினைத்தவுடன் போய்விட முடியாது. ஆயிர மைலுக்கு அப்பாலுள்ள டில்லிக்குப் போக நினைத்தால் அடுத்தபடி புறப்படும் விமானத்தில் ஏறிப் போய்விடலாம். இலங்கை டில்லியைவிட நமக்கு எவ்வளவோ பக்கத்தில்தான் இருக்கிறது. ஆலுைம் அது தூரத்தில் இருக்கிறது. எளிதிலே நினைத்தவுடன் போகும்படியான நிலையில் இல்லை.