உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருவி ஒசை

75

தோம். 16 வருஷ காலம் ஆகிவிட்டது. விரைவிலே நிறைவேறும்..." என்று கன்னையா ராஜு கோயிலின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார். தமிழ் நாட்டில் புதுக்கோட்டையைச் சார்ந்த கண்டனுரைச் சேர்ந்தவர் அவர் குடும்பம் உண்டு. ஆனாலும் அவர் தன்னந் தனியே அந்த மலைக் காட்டில் கதிரேசன் கோயிலைக் கட்டுவதையே தம் பாக்கியமாகக் கருதித் தொண்டு புரிந்து வருகிறார். அதற்காக அவர் எத்தனையோ பாடுபடுகிறார்.

"இந்த வட்டாரத்திலேயே பல மைல்களுக்குக் கோயில் இல்லை. ஏறத்தாழ ஐயாயிரம் தோட்டத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டினர், இந்தப் பிரதேசங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இது உபயோகமாக இருக்கும். இன்னும் கோயிலில் பிரதிஷ்டை ஆகவில்லை. விக்கிரகங்களெல்லாம் வந்து விட்டன. இப்போதே இங்கே அடிக்கடி தொழிலாளர்கள் வந்து விவாகங்களை நடத்துகிறார்கள். இந்தக் கோயிலைப் பூர்த்தி பண்ணவேண்டும் என்ற கவலையே எனக்கு எப்போதும் இருக்கிறது. நீங்களெல்லாம் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்" என்றார்.

அப்போது அந்த அன்பருடன் இருந்த ஒரு தோழர் ஒரு செய்தியைச் சொன்னார். இந்தக் கோயில் மிகவும் நன்றாக விளங்கப் போகிறதென்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அவசர அவசரமாக ஒரு காரியம் நடந்தால் அது நெடுங்காலம் நிற்காது. தென்னமரம் மூன்று வருஷத்தில் காய்த்தால் முப்பது வருஷம்வரையில் நிற்கும். பத்தாம் வருஷத்தில் காய்த்தால் நூறு வருஷம் நிற்கும். இவ்வளவு காலம்