பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
சிகிரிக் குன்றம்

"ன்று எந்த எந்த இடத்துக்குப் போகலாம்?" என்று அன்பர் கணேஷைக் கேட்டேன்.

" இன்றைக்குச் சிற்பச் செல்வங்களையும் ஓவியச் செல்வங்களையும் உங்களுக்குக் காட்டலாம் என்று எண்ணுகிறேன்" என்றார் அவர்.

"எந்த இடங்களில் அவை இருக்கின்றன? இங்கிருந்து எவ்வளவு தூரம் போகவேண்டும்?" என்று கேட்டேன்.

" நூற்றைம்பது மைல் போகவேண்டும். சிகிரியாவைப் பார்த்துக் கொண்டு பொலன்னறுவாவையும் போய்ப் பார்க்கலாம். நேரம் இருந்தால் அநுராதபுரம் போகலாம்.”

ஓவிய யாத்திரையைத் தொடங்கினோம். (19.9-51, புதன்கிழமை.) எங்களுடன் மற்றொரு நண்பரும் சேர்ந்து கொண்டார். தமிழ்ப் பத்திரிகைகளை நன்றாகப் படித்து எழுத்தாளர்களைத் தரம் பிரித்துப் பார்க்கும் ரசிகர் அவர். நாகலிங்கம் என்ற அந்த அன்பர் கண்டிக்கு அருகில் குருதெனியா என்ற இடத்தில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.

நாகலிங்கம் தமிழ் நாட்டிலிருந்து சென்றவர். இராமநாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்த பரத்தை வயல் என்ற ஊரில் முன்பு முத்துக் குட்டிப் புலவர் என்ற கவிஞர் இருந்தார். அவருடைய வழி வந்தவர் அந்த அன்பர். இந்தச் செய்தியை அவர் மூலமாகத் தெரிந்து கொண்ட பிறகு நான் அவரைச் சும்மா விடு-