பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிகிரிக் குன்றம்

85

வேனா? "அவர் என்ன என்ன நூல்கள் செய்திருக்கிறார் ? சேதுபதியினிடம் சம்மானம் பெற்ற துண்டா? அந்த வம்சத்தில் இன்னும் யாராவது புலவர்கள் இருந்திருக்கிறார்களா? உங்கள் ஊரில் ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றனவா?" என்று சரமாரியாகக் கேள்விகளை அடுக்கினேன். தம்முடைய முன்னேர்களைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எல்லோருக்கும் ஆசை இருப்பது இயல்பு. நண்பர் நாகலிங்கமும் முத்துக்குட்டிப் புலவரைப் பற்றிச் சில செய்திகள் சொன்னதோடு அவர் பாடிய பாடல்கள் சிலவற்றையும் சொன்னர்.[1]

அவர் ஒரு சமயம் சம்ஸ்தானத்துக்குக் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுக்க முடியாமற் போயிற்றாம். அப்போது சம்ஸ்தானத்தைச் சார்ந்த அதிகாரி அவரைத் துன்புறுத்தினராம். முத்துக்குட்டிப் புலவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. தம்முடைய குலதெய்வமாகிய மருதூர்ச் சிவபெருமானிடம் முறையிட்டுக் கொள்வதையன்றி அப்போதைக்கு ஏதும் செய்யமுடியவில்லை.

கையிலோ அரைக்காசுக் கிடமே இல்லை;
கடனென்ருல் இருநூறு பொன்மேல் ஆச்சு;
தெய்யிலே கைபோட்டுக் கொடுத்திட்டாலும்
நிர்வாகம் அரண்மனையார் அறிய மாட்டார்:
பையிலே பணமிருக்க நீயும் சும்மா
பார்த்திருக்க நியாயமுண்டோ பரனே ஐயா,
மையிலே தோய்ந்தவிழி உமையாள் பாகா,
மருதுனரா, என்வரிக்கு வகைசெய் வாயே

என்று பாடினர். நாகத்தின் படத்துக்குப் பையென்றும் பணமென்றும் பெயர் உண்டு. நாகம் அணிந்த


  1. நாட்டரசன் கோட்டைக் கண்ணுடையம்மன் பள்ளுப் பாடினவர் இவர்.