பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இலங்கைக் காட்சிகள்

இருந்தன. அந்தக் காடுகளில் மனிதன் புகாத இடங்கள் பல உண்டு. இரண்டோரிடங்களில் இலங்கை அரசாங்கத்தார் காட்டை அழித்து நெல் விளைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். காலையில் எட்டு மணிக்குக் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் பதினொரு மணிக்குச் சிகிரியாவை அடைந்தோம்.

சிகிரி என்னும் மலையை நடுவிலே கொண்ட பகுதியையே சிகிரியா என்று சொல்லுகிறார்கள். சிங்ககிரி என்ற தொடர் திரிந்து சிகிரி ஆகிவிட்டது. இங்கே ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த கஸ்ஸபன் என்ற மன்னன் (கி.பி.478-496) அரண்களையும் நகரையும் அமைத்துக் கொண்டு பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் கட்டிய அரண்மனையின் சின்னங்களும் அக்காலத்தில் இந்த மலைக்குகையில் எழுதப் பெற்ற வண்ண ஓவியங்களும் மக்கள் உள்ளத்தைக் கவர்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்காக அயல் நாட்டார் அடிக்கடி வருகிறார்கள்.

இலங்கை சிறிய தீவாக இருந்தாலும் அதற்கும் சுவையுள்ள சரித்திரம் இருக்கிறது. நெடுங்காலமாக மக்கள் வாழ்ந்து வரும் தீவு அது. தமிழ்நாட்டுக்கும் அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர்பு உண்டு. அங்கும் மன்னர் வம்சங்கள் இருந்தன. மன்னர் பலர் தம்முள்ளே போரிட்டார்கள், வீரச் செயல் புரிந்தார்கள். குடிகளுக்கு நன்மை செய்தார்கள்; புலவர்களையும் கலைஞர்களையும் பாதுகாத்தார்கள். கோயில்களைக் கட்டினார்கள். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களைத் தலைநக