சிகிரிக் குன்றம்
91
னும் கூடிக் கூடிப் பேசினார்கள். திடீரென்று ஒரு நாள் தாதுசேனனை ஓர் அறையிலே அடைத்துச் சாத்தினார்கள். கஸ்ஸபன் தானே அரசன் என்று சொல்லிச் சிங்காதனம் ஏறினான். கஸ்ஸ்பனுடைய சகோதரனாகிய மொக்கல்லானன் தனக்குத் துணை யாரும் இல்லை என்று அறிந்து கொண்டான். அங்கே இருந்தால் தன் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் என்று பயந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு ஓடிப்போனான். அறையிலே அடைபட்ட தாதுசேனன் உணவின்றி இறந்தான்.
நியாயமான முறையில் அரசு கிடைத்திருந்தால் நாட்டை அமைதியாக ஆளலாம். அதற்கு மாறாக அரசைக் கைப்பற்றிய கஸ்ஸபன் அநுராதபுரத்தில் இருந்து அரசாள விரும்பவில்லை. தக்க பாதுகாப்புள்ள இடத்தில் அரண்களை அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று முடிவு செய்தான். அவனுக்கு இந்தச் சிங்ககிரிப் பகுதி தன் கருத்துக்கு இசைந்த இடம் என்று தோன்றியது.
சிங்ககிரியின் உச்சியிலே அரண்மனையைக் கட்டினான். கோட்டை கட்டினான். மலையைச் சுற்றிலும் கொத்தளங்களும் அகழியும் அமைத்தான். அங்கே பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான். சிங்ககிரியின் தாழ் வரையில் உட்குழிவான சில இடங்கள் இருக்கின்றன. அவ்விடங்களில் மிக அற்புதமான ஓவியங்களை எழுதச் செய்தான், கலைப்பண்பு நிறைந்த கட்டிடங்களைக் கட்டினான்.
தமிழ்நாட்டுக்குச் சென்ற மொக்கல்லானன். பதினெட்டு ஆண்டுகள் கழித்துத் தமிழ் மன்னர் உதவி பெற்று இலங்கைக்கு வந்தான். சிங்ககிரியை