பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

இலங்கைக் காட்சிகள்

முற்றுகையிட்டான். கஸ்லபன் கோட்டையை விட்டு வெளியே வந்து சண்டையிட்டான். கடைசியில் தனியே போய்த் தற்கொலை செய்துகொண்டான். மொக்கல்லானன் அரசைக் கைப்பற்றி மீட்டும் அநுராதபுரத்தையே இராசதானியாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான்.

சிகிரியிலுள்ள ஓவியங்களையும் பிறவற்றையும் இலங்கை அரசாங்கத்தார் நன்றாகப் பாதுகாத்து வருகிறார்கள். சிகிரி மலையின் தோற்றம் சிங்கத்தின் தலைபோல இருக்கிறது. நேர் ரஸ்தாவிலிருந்து சிறிது தூரம் உள்ளே போய் இந்த மலையை அடையவேண்டும். மலையென்றால் மிகப் பெரிய மலையென்று சொல்ல முடியாது. குன்றம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். தரையிலிருந்து 600 அடி உயரம் உள்ளது இந்தக் குன்றம்.

இந்தக் குன்றின் அடிவாரத்திலிருந்து முப்பது படிகள் ஏறினால் சற்று விரிந்த மேடான வெளி இருக்கிறது. அந்த வெளியின் ஒரு பக்கத்தில் ஒரு துறுகல் - குண்டுப் பாறை - இருக்கிறது. அதைத் தொட்டிப் பாறை (Cistern Roek) என்று சொல்கிறார்கள். அதன்மேல் படிக்கட்டுகளுடன் தொட்டி போன்ற சிறிய குளம் ஒன்று அமைந்திருக்கிறது. அதன் அருகில் மற்ருெரு பாறையை முற்றத்தைப்போலச் சமமாகச் செதுக்கியிருக்கிறார்கள். அதன் ஒரு பக்கத்தில் உயரமான மேடைபோலக் கல்லில் அமைந்த ஆசனங்கள் இருக்கின்றன. அரசன் தன்னைப் பார்க்க வருவோரைக் காண அமைத்த இடம் அது என்று சொல்கிறார்கள்.