பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இலங்கையில் ஒரு வாரம்

“சிலோனுக்கு எதற்காக?”“”

“சிலோனைச் சுருட்டி எடுத்துக்கொண்டு வருவதற்கு!”

“வந்து?”

“விரித்துக்கொண்டு படுப்பதற்கு.”

“சரி! நீர் எந்த வருஷம் பிறந்தீர்?”

“1953-ல்.”

“எங்கே பிறந்தீர்?”

“ஒரு இருட்டறையில்!”

“சாட்சி உண்டா?”

“கிடையாது.”

“அது வருந்தத் தக்கது. நீர் எப்போது இறந்தீர்?”

“1950-ல்”

“எங்கே!”

“காஷ்மீரில் நடந்த விமான விபத்தில்!”

“பிறகு இங்கு எப்படி வந்தீர்!”

“இந்திய சர்க்கார் விமான விபத்தைப் பற்றி விசாரிக்கக் கமிஷன் ஒன்று நியமித்தார்கள். கமிஷன் விசாரித்து விபத்து நேரிடவில்லை என்று முடிவு செய்தது. நானும் அந்த முடிவை ஒப்புக் கொண்டேன். துண்டு துண்டாய்க் கிடந்த என் உடம்பெல்லாம் ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டு உயிர் பெற்று எழுந்தது. பிறகு இங்கே வந்தேன்.”

“ரொம்ப வருந்தத் தக்க விஷயம். ஓக்கே! நீர் போகலாம்.”

இப்படியாகப் பலவிதச் சோதனைகளுக்கு உள்ளான பிறகு ஆகாச விமானத்துக்குச் சென்றோம். எங்களை இலங்கைக்கு ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருந்த விமானத்தின் முன் பகுதியில் “சீதா தேவி” என்று எழுதி-