பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

19

யிருந்தது. விமானத்தின் பெயர் அதுவென்று தெரிந்தது. இது பற்றி நண்பர் ஸ்ரீ பெரியசாமித் தூரன் அவர்களுக்கு மிகவும் சந்தோஷம்.

“முன் காலத்தில் அன்னை சீதாதேவியைக் கண்டு பிடித்து வருவதற்காக அனுமார் ஆகாசமார்க்கமாய் இலங்கைக்குச் சென்றார். இப்போது அதற்குப் பதிலாக அன்னை சீதா தேவி குழந்தைகளாகிய நம்மை இலங்கைக்குக் கொண்டு போகிறார்” என்று சொல்லிச் சொல்லி ஆனந்தப் பட்டார்.

விமானத்துக்கு அனுமார் என்று பெயர் வைக்காமல் “சீதா தேவி” என்று பெயர் வைத்ததில் எனக்கும் சந்தோஷந்தான். சென்னை சர்க்கார் மந்திரிகள் ஆகாயப் பிரயாணம் செய்வதற்காக ஒருவிமானம் வாங்கினார்கள். அதற்கு “அனுமார்” என்று பெயர் வைத்தார்கள். அனுமார் தமது சுபாவத்தை அடிக்கடி காட்டிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் ‘அனுமார்’ மீது ஏறிச் சென்னை மந்திரிகள் டில்லிக்குப் போனார்கள். வழியில் ஒரு கிராமத்தில் சில பக்தர்கள் ராம பஜனை செய்து கொண்டிருந்தார்கள். அனுமார் காதில் அது விழுந்து விடவே, திடீரென்று முன்னெச்சரிக்கையில்லாமல் கீழே ஒரு மைதானத்தில் இறங்கி விட்டார். அப்புறம் அங்கிருந்து புறப்படவும் மறுத்துவிட்டார். சென்னை மந்திரிகள் திண்டாடித் திணறி, பிழைத்தது புனர்ஜன்மம் என்ற எண்ணத் துடன், கால்நடையாகவும் கட்டை வண்டியிலும் சென்று ரயில் ஏறி டில்லி போய்ச்சேர்ந்தார்கள்.

கருணை மிக்க சீதாதேவி அப்படியெல்லாம் எங்களைப் பாடாய்ப் படுத்தாமல் பத்திரமாய் யாழ்ப்பாணத்தில் கொண்டுபோய் இறக்கினார். அங்கேயுள்ள சுங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், போலீஸ்