பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

21

இந்த நிலைமையில் இலங்கையில் தற்சமயம் உணவுத் தட்டுப்பாடு கிடையாது. எல்லா மக்களுக்கும் பசி தீர உண்பதற்கு வேண்டிய உணவு கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்ல; அரிசி கடன் கொடுப்பதற்கு வேண்டிய வசதியும் இருக்கிறது.

இவ்வளவு திருப்திகரமான நிலைமை இலங்கையில் தற்சமயம் குடி கொண்டிருப்பதற்குக் காரணங்கள் என்ன வென்று விசாரித்துப் பார்த்தபோது பின்வரும் காரணங்கள் தெரிந்தன:

1. உணவுத் திட்டத்தை முன் ஜாக்கிரதையுடன் சரியாக வகுத்து அமுல் நடத்துகிறார்கள். உணவுத் தேவை இவ்வளவுதான் என்பதைச் சரியாக நிர்ணயித்துக் கொண்டு, அதில் பற்றாக் குறைக்குப் பர்மாவிலிருந்து அரிசியும் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை மாவும் தருவித்துக் கொள்கிறார்கள். உணவுப் பங்கீடு முறை, புகாருக்கு இடமின்றிச் சரிவர அமுல் நடத்தப் பட்டு வருகிறது. இது குறித்து இலங்கை அரசாங்கத்தை நாம் கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும்.

உணவு இலாகா இவ்வளவு திறமையுடன் நிர்வகிக்கப்பட்டு வருவதத்குப் பொறுப்பாளியான அதிகாரி ஸ்ரீ ஆள்வாப் பிள்ளை என்னும் தமிழர் தான் என்று அறிந்தபோது எனக்கு இரு மடங்கு மகிழ்ச்சி உண்டா யிற்று. இலங்கையில் நான் சந்தித்துப் பேசிய நண்பர்களில் ஸ்ரீ ஆள்வாப் பிள்ளை அவர்களின் திறமையைப் பாராட்டாதவர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

2. இலங்கை வாசிகள். (சிங்களவர், இந்தியர்கள், தமிழர்கள் அனைவரும்) அரிசியின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். “அரிசியே கதி.....அரிசிச் சோறு இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது”