பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

35

நாளைக்குள் ஏழரை லட்சம் தமிழர்கள் அதிகமானது எப்படி?” என்று நேயர்கள் சிலர் கேட்கக் கூடும்.

என் அன்பார்ந்த நேயர்களே! கட்டாயம் நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியது தான். நான் பதில் சொல்லக் கடமைப் பட்டவன். சென்ற இதழில் நான் கூறியதும் உண்மை; இந்த இதழில் நான் மேலே கூறியிருப்பதும் உண்மை. சென்ற இதழில் குறிப்பிட்ட ஏழரை லட்சம் தமிழர்கள் கடந்த நூறு ஆண்டுக்குள் தோட்டத் தொழிலாளிகளாகவும் வீட்டு வேலைக்காரர்களாகவும் சில்லறை வர்த்தகர்களாகவும் சென்று இலங்கையில் குடியேறியவர்கள். இந்த ஏழரை லட்சம் தமிழர்களின் பிரஜா உரிமைகளைப் பறித்து அவர்களை விரட்டியடித்துவிடத்தான் கருணை மிகுந்த சிங்கள மந்திரிகள் முயன்று வருகிறார்கள்.

இலங்கையில் வசிக்கும் இன்னொரு ஏழரை இலட்சம் தமிழர்களோ பழைய புராதன பூர்வீக இலங்கைக் குடிகள். அவர்கள் இலங்கையில் எப்போது வந்து குடியேறினார்கள் என்பதை வரையறுத்துக் கூற இயலவில்லை. குறைந்தபட்சம் இரண்டாயிர வருஷங்களாக இந்தப் பழந்தமிழர்கள் இலங்கைக் கடற்கரையோரப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். தமிழ் நாட்டுக்கும் இவர்களுக்கும் சரித்திர பூர்வமாகத் தொடர்பு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறது. சமீப காலத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்த பெரியார்களான ஸ்ரீ ஆறுமுக நாவலரும் சுவாமி விபுலானந்தரும் இலங்கையின் பூர்விகத் தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்களே.

தவிர, இலங்கை பல துறைகளிலும் புத்துயிர் பெறுவதற்குக் காரண புருஷராயிருந்த ஸர் பொன்னம்பலம் ராமநாதன் ஈழ நாட்டுப் பழம்பெருங் குடியைச்