பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

இலங்கையில் ஒரு வாரம்

சேர்ந்தவர். ஒரு காலத்தில் இலங்கையில் ஸர் பி. ராம நாதனுக்கு இணையில்லாத செல்வாக்கு இருந்தது. பழைய யதேச்சாதிகார பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்திலும் அவருக்கு இணையில்லாத மதிப்பு இருந்தது. சர்க்காரும் மதித்தனர்: மக்களும் மதித்தனர். சிங்கள மக்களோ அவருக்கு என்றென்றும் தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டவர்கள்.

முதலாவுது மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1917-18ல், இலங்கையில் ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்றது. இன்றைய தினம் இலங்கையின் சர்வ சக்திவாய்ந்த பிரதமராயிருக்கும் ஸ்ரீ சேன நாயகர் அப்போது சாதாரண பிரஜையாக இருந்தார். அவரும் அவருடைய சகாக்கள் சிலரும் மதுவிலக்கு இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த இயக்கத்தின் காரணமாகச் சிங்களவரிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டது. அது எப்படியோ சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் அடிதடி கலகமாக முடிந்தது. இன்னும் பெரிய வேடிக்கை என்னவென்றால், மேற்படி சமூகக் கலவரத்தை அப்போ திருந்த பிரிட்டிஷ் கவர்னர் பிரிட்டிஷ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எழுந்த பெரும் புரட்சியாக எண்ணிவிட்டார். உடனே சேன நாயகா, பேரன் ஜயதிலகா முதலிய பல முக்கியமான சிங்களத் தலைவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தார். சிங்கள மக்கள் பீதியடைந்து செய்வதறியாது திகைத்திருந்தனர். அச்சமயம் ஸர் பொன்னம் பலம் ராமநாதன் “நான் இருக்கிறேன், அஞ்ச வேண்டாம்!” என்று அபயப் பிரதானம் அளித்தார். “இங்குள்ள அதிகாரிகளிடம் மன்றாடிப் பயனில்லை. இங்கிலாந்து சென்று உண்மையை எடுத்துக்கூறி நியாயம் பெற்று வருகிறேன்!” என்று பிரயாணமானார். எம்டன்