பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இலங்கையில் ஒரு வாரம்

லிருந்து அவிழ்த்து விட்டு விட்டுச் சிங்களத் தலைவர்கள் தாங்களே ரதத்தை இழுத்தார்கள்; ஸர் ராமநாதனிடம் தங்களுடைய அன்பையும் மரியாதையையும் நன்றியையும் காட்டுவதற்காகத்தான்.

இதெல்லாம் பழங்கதைதான். ‘கதையா? கனவா?’ என்றுகூடச் சந்தேகம் தோன்றும் வண்ணம் தற்சமயம் இலங்கையில் காரியங்கள் நடந்து வருகின்றன. சிங்கள மந்திரிகளின் மனப்போக்கு அவ்வளவு தூரம் மாறியிருக்கிறது. புதிதாக வந்த இந்தியர்களின் பிரஜா உரிமைகளைப் பறிக்கப் பார்ப்பது போல், யாழ்ப்பாணத் தமிழர்களின் பிரஜா உரிமைகளைச் சிங்கள மந்திரிகள் பறிக்க முடியாது. அவர்களை இலங்கையை விட்டுத் துரத்தி விடலாம் என்று கனவு காணவும் முடியாது.

ஆயினும் ஏழரை லட்சம் யாழ்ப்பாணத் தமிழர்களின் மனதில் இன்று அமைதி இல்லை; நாளை என்ன நேரிடுமோ என்ற கவலை குடி கொண்டிருக்கிறது. இன்று ஏழரை லட்சம் புதிய இந்தியர்களைத் துரத்தப் பார்க்கிறவர்கள் நாளைக்கு ஏழரை லட்சம் பழைய தமிழர்களை எப்படி நடத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும்? இலங்கையின் மொத்த ஜனத்தொகை 67 லட்சம். பழைய தமிழரும் புதிய தமிழரும் சேர்ந்தால் பதினைந்து லட்சம். இந்தப் பதினைந்து லட்சத்தில் ஏழரை லட்சம் பேரை உரிமை அற்றவர்களாக்கிவிட்டால் மிச்சமுள்ள ஏழரை லட்சம் தமிழர்கள் மிகச் சிறுபான்மையாகிவிடுவார்கள் அல்லவா? யாழ்ப்பாணப் பழந் மிழர்களில் பெரும் பணக்காரர்களோ, தோட்ட முதலாளிகளோ அதிகம் பேரில்லை. பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர். படிப்பு, சர்க்கார்