பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

41

போதுதான் என்னுடைய பெருமை எனக்குத் தெரிந்தது! குறைந்த பட்சம் பதினாயிரம் பேருக்குச் சமம் நான் என்று அறிந்து கொண்டேன். ஏனெனில், பதினாயிரம் பேர் அடங்கிய கூட்டத்தில் பிரசங்கம் செய்வது போல் ஸ்ரீ செல்வநாயகம் தமது கட்சியை எனக்குச் சொற்பொழிவாகவே ஆற்றினார்!

இது ஒரு பழைய சம்பவத்தை எனக்கு ஞாபகப்படுத்திற்று. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாதம் மும்மாரி பொழிந்து தேசம் சுபிட்சமாயிருந்த காலத்தில், மகாத்மா சுயராஜ்ய இயக்கத்தை ஆரம்பித்தார். சுயராஜ்ய மந்திரத்தைக் கிராமங் கிராமமாகப் போய்ச் சொல்ல வேண்டு மென்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். நானும் சில கிராமங்களுக்குப் போனேன். ஒரு கிராமத்தில் தம்பட்டம் அடித்து, கிராமச் சாவடிக்கு முன்னால் மாபெரும் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த பிறகு, குறிப்பிட்ட நேரத்தில், கையில் ஒரு ஹரிகேன் லாந்தருடன் சாவடிக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே ஒரே ஒரு மனிதர்தான் ஆஜராயிருந்தார். அந்த ஒருவராவது வந்திருக்கிறாரே என்ற நன்றி உணர்ச்சி யுடன், பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவில் செய்துவரும் அட்டூழியங்களைப் பற்றி, சாங்கோபாங்கமாகக் கேட்பவரின் இரத்தம் கொதிக்கும்படியாக, ஒன்றேகால் மணி நேரம் பிரசங்கம் செய்தேன். நானே வந்தனோபசாரமும் சொல்லிக்கொண்ட பிறகு சபையோராகிய அந்தத் தனி நபரைப் பார்த்து, “ஐயா! தங்கள் தேசபக்தி என்னைப் பரவசப்படுத்துகிறது. தாங்கள் யாரோ! எந்த ஊரோ?” என்றேன். அதற்கு அந்தப் புண்ணியவான், “என்னைத் தெரியவில்லையா, ஸாமி! நான் உம்மைத் தொடர்ந்து கோபி-