பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இலங்கையில் ஒரு வாரம்

செட்டிபாளையத்திலிருந்து கரூர் வரையில் வந்திருக்கிறேனே? நான் சி. ஐ. டி.க்காரன்! உங்களைக் கண் காணிப்பதற்காக என்னைப் போட்டிருக்கிறார்கள்!” என்றான்.

நல்லவேளையாக நான் சி.ஐ.டி. க்காரன் அல்ல–மற்றப்படி ஸ்ரீ செல்வநாயகம் என்னை ஒரு பெரிய பொதுக் கூட்டமாக நினைத்துச் சக்கைப்போடு போட்டு விட்டார்.

ஒரு இலட்சியத்தில் ஆவேசம் உள்ளவர்கள்தான் இப்படியெல்லாம் செய்யக்கூடும். ஸ்ரீ செல்வநாயகத்துக்கு ஆவேசம் இருக்கிறது. அத்துடன் வாதத்திறமையும் அபாரமாயிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வசிக்குமிடங்கள் ஒரு தனி அரசு ஆக்கப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறார். தனி அரசு என்றால் பாகிஸ்தானைப் போன்ற தனி அரசு அல்ல. உள் நாட்டுக் காரியங்களில் சர்வாதிகாரம் உள்ள தனி அரசும், வெளி நாட்டு அரசியல், போக்குவரவு, சைன்யம் முதலியவற்றுக்கு இலங்கையுடன் இணைப்பும் இவர்கள் கோருகிறார்கள். இதைச் சமஷ்டி அரசியல் என்றும் ஸ்ரீ செல்வநாயகம் கோஷ்டியார் சொல்கிறார்கள்.

தமிழரசுக் கோரிக்கைக்கு எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பொருட்டு, இலங்கையில் தமிழர்கள் மிகப் பெரும்பாலராய் வசிக்கும் இடங்களையெல்லாம் குறிப்பிட்டு ஸ்ரீ செல்வநாயகம் ஒரு படம் தயாரித்திருக்கிறார். அந்தப் படத்தின்படி கடற்கரையோரமாகக் கோடுபோட்டுக் குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் தமிழர் வாழும் பிரதேசங்கள். இலங்கையின் நடுமத்தியில் குறிப்பிட்ட பிரதேசம் புதிதாக வந்த தமிழ்த் தொழிலாளிகள் வசிக்கும் தோட்டப் பிரதேசங்-