பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

43

கள். ஸ்ரீ செல்வநாயகம் திட்டத்தின்படி இலங்கை விஸ்தீரணத்தில் மூன்றில் ஒரு பகுதி தமிழரசாக மாற வேண்டும். இந்தக் கட்சிக்கு இலங்கையில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதைக் கவனிக்க எனக்கு அவகாசம் இல்லை. ஸ்ரீ செல்வநாயகத்தின் அந்தரங்க சுத்தியான ஆர்வத்தைக் காண மட்டுமே முடிந்தது.

“சுதந்திரன்” ஆசிரியர் ஸ்ரீ சிவநாயகம் நல்ல மறு மலர்ச்சி எழுத்தாளர். அத்துடன் சிறந்த பேச்சாளர். தமிழ்ச்சங்க விழாவில் இவர் நன்கு ஒத்துழைத்து ஓர் அரிய சொற்பொழிவும் ஆற்றினார்.

ஒரு பத்திரிகையைப் பற்றிச் சொன்ன பிறகு கொழும்பில் நடந்து வரும் இன்னும் இரு தினப் பத்திரிகைகளைப் பற்றியும் சொல்லிவிட வேண்டியதுதான்.

இலங்கையில் இன்று மிகப் பிரபலமாக விளங்கும் தினத் தமிழ்ப் பத்திரிகை “வீரகேசரி” முப்பதினாயிரம் பிரதிகளுக்குமேல் இந்தப் பத்திரிகை விநியோகமாகி வருகிறது. பலவிதக் கஷ்டங்களுக்கு உள்ளாகிவரும் இந்தியர்களின் கட்சியை எடுத்துச் சொல்லி “வீரகேசரி” தீவிரமாகப் போராடி வருகிறது. யாழ்ப்பாணத் தமிழர்களின் நலன்களையும் பாதுகாக்க முயன்றுவருகிறது. ஆகவே இலங்கையிலுள்ள எல்லாத் தமிழர்களின் அபிமானத்தையும் பெற்றிருக்கிறது. இவ்வளவுடன், எந்தக் கட்சியையும் நேர்மையுடன் எடுத்துச் சொல்லிப் போராடுவதினால் இலங்கை சர்க்காரும்—சிங்கள மந்திரி களும்கூட “வீரகேசரி” யை மதித்து நடந்து கொள்ளுகின்றனர். “வீரகேசரி” " ஆசிரியர் ஸ்ரீ கே. பி. ஹரன் பரம சாத்வீகரான மனிதர். உயர்ந்த இலட்சியங்கள் படைத்தவர். சிறந்த ஆஸ்திகர்; பக்திமான். பத்திரிகைத் தொழிலுக்கு அடுத்தபடியாக ஆஸ்திக முயற்சிகளில்