பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

இலங்கையில் ஒரு வாரம்

தாவத்தை என்னும் விசித்திரப் பெயர் உள்ள ஊரில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் என்னும் பழமையான ஆலயம் இருக்கிறது. இது வெகு காலமாகச் சிதிலமாகக் கிடந்தது. ஸ்ரீ வி. எஸ். சாமிநாத செட்டியார் என்னும் வணிக வைசியர் அந்தப் பழைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் திருப்பணியில் ஈடுபட்டார். பதின்மூன்று ஆண்டுகள் முயன்று, தம் குலத்துப் பிரமுகர்கள் பலருடைய உதவியுடன் திருப்பணியை முடித்துக் கும்பாபிஷேகமும் கடத்தினார். கும்பாபிஷேகம் நடந்த மூன்று மாதத்திற்கெல்லாம் இறைவன் அந்தப் பெரியாரைக் கைலாசத்துக்கே அழைத்துக்கொண்டார்.

இந்தப் புனிதமான ஆலயத்தை எங்களுக்குத் தரிசனம் செய்துவைத்தவர் ஸ்ரீ பி. ஸி. கதிர்வேல் செட்டியார் என்னும் மற்றொரு பிரபல இந்திய வர்த்தகர். இவரும் சிறந்த பக்திமான். நம் திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயரின் குழாத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் இவர் சிரத்தை கொண்டிருப்பதோடு கூட, இன்னும் பல பொது நலத்தொண்டுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். “இந்தியர்கள் இலங்கையில் பணம் சம்பாதித்து இந்தியாவுக்குக் கொண்டு போவதில் முனைந்திருக்கிறார்களே தவிர இலங்கையில் நிரந்தரமான தர்மம் எதுவும் செய்வதில்லை” என்ற புகார் இவரால் ஓரளவு நீங்கி வருகிறது என்று நண்பர்கள் சொன்னார்கள்.

தமிழ்ச் சங்க ஆண்டு விழாவின்போது பெற்ற அநுபவங்களிலிருந்தும் இந்த இரண்டு ஆலயங்களில் கண்ட காட்சிகளிலிருந்தும் ஸ்ரீ தூரனுக்கும் எனக்கும் ஒரு நிச்சயம் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் இப்போது சிலர் “தமிழை ஒழித்து விடுவோம்!” என்றும், இன்-