பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

இலங்கையில் ஒரு வாரம்


ஸ்ரீ பேரின்ப நாயகம் தம் வாழ்க்கையில் இரண்டு பேரைக் காதலித்தார். அவர் காதலித்தவர்களில் ஒருவர் காந்திமகான்; இன்னொருவர் அவரது மனைவியார்.

1947-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி மாலை 6-மணிக்கு ஸ்ரீ பேரின்ப நாயகத்தின் அருமை மனைவி இறந்து போனார். இந்தப் பொறுக்க முடியாத துயரத்தில் அவர் ஆழ்ந்து தவித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் வந்தார். “உங்களுக்கு இன்னொரு பேரிடி போன்ற செய்தி வந்திருக்கிறது!” என்றார். “அது எப்படி முடியும்? அது என்ன செய்தி!” என்று ஸ்ரீ போரின்ப நாயகம் கேட்டார். அவருடைய மனைவி காலமான ஏறக்குறைய அதே நேரத்தில் காந்திமகான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை நண்பர் தெரிவித்தார். அன்று இரவே ஸ்ரீ பேரின்ப நாயகத்தின் வயதில் பத்து வயது கூடிவிட்டது என்று அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள்.

இதற்கிடையில் ஸ்ரீ பேரின்பநாயகம் ஒரு தப்புக் காரியம் செய்தார். அதாவது இலங்கைச் சட்டசபைத் தேர்தலுக்கு நின்றார். சட்டசபைக்கு நின்றது தவறான காரியம் இல்லை. “காந்தீயவாதி” என்று சொல்லிக் கொண்டு நின்றதுதான் தவறு. சிங்களவர்களின் கொடுமையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவோம் என்றும், தமிழர்களுக்கு 100-க்கு 50 பிரதிநிதித்துவம் கேட்போம் என்றும், இல்லையேல் தனித் தமிழரசு ஸ்தாபிப்போம் என்றும் சொல்லிக் கொண்டு பிறர் நின்றார்கள். சண்டமாருதப் பிரசாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ் நிலையில் ஸ்ரீ பேரின்பநாயகம் காந்தீயத்தின் பெயரால் நின்றார். நிற்கலாம்; ஆனால் ஜயிக்க முடியுமா? சூறா-