பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

67


வளியின் முன்னால் இளந்தென்றல் நிற்குமா? எனவே, தோற்றுப்போனார்.

இதனால் காந்தீயத்தினிடம் அவருக்குப் பற்றுக் குறைந்து விடவில்லை. இன்று அகில இலங்கைக் காந்திய சேவா சங்கத்தின் தலைவராக இருக்கிறார். எது எப்படியானாலும் காந்தியக் கொள்கையை இலங்கையில் பரப்புவது என்று இந்தச் சங்கம் கங்கணம் கட்டிக்கொண் டிருக்கிறது. காந்திஜியின் மணி மொழிகள் அனைத்தையும் சிங்கள பாஷையில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு ஒரு பெரிய திட்டம் போட்டிருக்கிறது. இச்சங்கத் தின் காரியதரிசி மற்றொரு பரம காந்தி பக்தரான ஸ்ரீ சி.க. வேலாயுதம் பிள்ளை

இலங்கைக்கும் சிறப்பாக யாழ்ப்பாணத்துக்கும் ஸ்ரீ பேரின்ப நாயகம் செய்திருக்கும் தொண்டுகளை அளவிட முடியாது. இலங்கைத் தீவுக்குக் காந்தி மகானையும், நேரு அவர்களையும், ராஜாஜியையும் தருவிப்பதற்கு மூல காரணமாயிருந்தவர் அவர்தான். ஏன் நான் இம்முறை இலங்கை சென்றதற்குக்கூட முக்கிய குற்றவாளி அவர்தான் “இங்கே பலர் உங்களுடைய சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறார்கள். நீங்கள் வருகிறீர்களா, அல்லது நாங்கள் புறப்பட்டு அங்கே வரட்டுமா?” என்று எழுதியிருந்தார். இப்போதைய தமிழ் நாட்டு உணவு நிலைமையில் நான் என்ன பதில் சொல்ல முடியும்? நான் வருகிறேன்; நானே வருகிறேன் என்று கதறிக் கொண்டு கிளம்பினேன்.

முதலில் பொதுத் தொண்டிலேயே வாழ்க்கையைச் செலவிட்டு வந்து, பிறகு சில காலம் வக்கீல் தொழில் செய்த ஸ்ரீ பேரின்பநாயம், இப்போது பல நண்பர்களின் விருப்பத்தின் பேரில் கொக்குவில் ஹிந்துக் கல்லூரித்