பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

71

தோடு பல அரிய பழந்தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்த் தாய்க்குத் தொண்டு புரிந்து வருகிறார். இம்முறை நான் சென்றிருந்தபோது ஸ்ரீ பொன்னையா வைத்திய சாலையில் நோய்ப் படுக்கையில் படுத்திருப்பதாக அறிந்து, அவரை வைத்தியசாலைக்குப் போய்ப் பார்க்க விரும்பினேன். ஸ்ரீ பொன்னையா அவ்வளவு தூரத்துக்கு வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் பேசுவதாக இருந்த பொதுக்கூட்டத்துக்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டார். தமிழன்பும் உண்மையான நட்பும் எவ்வளவு சக்திவாய்ந்தவை?


7


மேற் கூறிய நண்பர்களிடம், வடக்கு இலங்கைக் கடற்கரையோரமாக எங்களை அழைத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். ‘மதுரையும் ஈழமும்’ கொண்ட பராந்தக சோழன் என்ன, பழையாறைச் சுந்தர சோழன் என்ன, தமிழ் நாட்டுப் பேரரசர்களிலே இணையற்ற பெருமை வாய்ந்த இராஜ ராஜ சோழன் என்ன, ‘கங்கையும் கடாரமும் கொண்ட’ இராஜேந்திர சோழன் என்ன, இத்தகைய அழியாப் புகழ்பெற்ற தமிழ் மன்னர்கள் மாபெரும் படைகளுடன் கப்பல் ஏறிக் கடல் கடந்து வந்து ஈழ நாட்டில் இறங்கியிருக்கக் கூடிய கடலோரப் பகுதிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குச் சில காலமாக இருந்து வந்தது. இதைப் பற்றி நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வந்தார் ஒரு மனிதர். அவர் உருவத்தில் குட்டையாயிருந்தார். களை பொருந்திய முகத்துடன் சமுகம் தந்தார்.

இல. 5