பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

இலங்கையில் ஒரு வாரம்

போது பல ஆபத்துக்கள் நேர்ந்திருந்தபோதிலும் ஹிந்து மதத்துக்குத் தீங்கு ஒன்றும் நேர்ந்திடவில்லை.

வடக்கு இலங்கை போர்ச்சுக்கீயரின் ஆட்சியில் இருந்த போது ஹிந்து மதத்தின் தெய்வங்களுக்கு, அல்லது விக்கிரகங்களுக்கு, ஆபத்துக்கள் நேர்ந்தன! அதிர்ஷ்டவசமாக, யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள தமிழர்கள் நமது சமய தத்துவங்களை நன்கு உணர்ந்தவர்கள். ஆகவே, விக்கிரகங்கள் போய்விட்டனவே என்று அழுது கொண்டிருந்துவிடவில்லை. விக்கிரகத்துக்குப் பதிலாக வேறு சின்னங்களை வைத்துக்கொண்டார்கள்.

யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி கோவில் உற்சவத்தைப்பற்றி முன்னமே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? இந்தக் கோவிலின் மூல ஸ்தானத்தில் முருகன் விக்கிரகம் இல்லை. அதற்குப் பதிலாக,

“சுற்றி நில்லாதே போ! பகையே!

துள்ளி வருகுது வேல்!”

என்று அமரகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய வெற்றி வேலாயுதத்தையே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

பருத்தித்துறைக்குப் போகும் வழியில் ஸ்ரீவல்லிபுரம் என்னும் விஷ்ணு ஸ்தலத்தைத் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது. இந்த ஊர் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திலும் விக்கிரகம் இல்லை. மகாவிஷ்ணுவின் சின்னமாக அவருடைய கையில் ஏந்திய சக்கரத்தையே பிரதிஷ்டை செய்து பூஜை நடத்திவருகிறார்கள். இந்த ஆலயமும் மிகவும் பரிசுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ சக்கர ஸ்வாமியின் சந்நிதிக்கெதிரே விஸ்தாரமான வெண்மணல் பிரதேசம் கண்ணையும் கருத்தையும் கவரு-