பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

இலங்கையில் ஒரு வாரம்


“மகாத்மா மறைந்த மறுதினம் 31-1-48 சனிக்கிழமை சுமார் 7 மணிக்கு மகாத்மா அவர்களை யாரோ சுட்டதால் அவர் இறந்ததாகக் கேள்விப்பட்டேன். நான் நம்பவில்லை. சில நிமிஷங்கழித்து விஷயம் உண்மைதான் என்றும், இரவு நேருஜி அழுதழுது பேசியதாகவும் அறிந்தேன்...... (மகாத்மா) மனிதனால் சகிக்கமுடியாத கஷ்டங்களையெல்லாம் மேற் கொண்டு ஜெயமடைந்த நிகழ்ச்சிகளெல்லாம் என் மனக்கண் முன் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்சி அளித்தன. மகாத்மா யாருக்காக மேற்படி கஷ்டங்களை அநுபவித்தாரோ அவர்களில் ஒருவனே அவருக்கு இறுதிக் காலனும் ஆனான். ஒரு நுண்ணிய ஊசியானது பெரிய சேலைகளையெல்லாம் தைத்து உடுப்பாக்கியது போலவும் ஒரு தீக்குச்சியானது எல்லையற்ற தீயைப் பரப்புவது போலவும் மகாத்மா ஆகிய சிறிய உருவம் தனது உடல் பொருள் ஆவி மூன்றையும் உலக சேவைக்கு ஒப்படைத்ததாலன்றோ இன்று எல்லா உலகமும் அவருடைய தத்துவங்களைப் பின்பற்றும்படி பிரசாரஞ் செய்து வருகின்றன!..........”

எப்பேர்ப்பட்ட தமிழ் வசன நடை! அதில் என்ன உணர்ச்சி! என்ன சக்தி! ‘நான் நம்பவில்லை’ என்ற சின்னஞ்சிறு வாக்கியம் எவ்வளவு பொருள் பொதிந்து உணர்ச்சி ததும்பி நிற்கிறது?

இதை எழுதியவர் ஒரு ஹரிஜனர்; அதிலும் வயது முதிர்ந்த கிழவர். இத்தகைய உத்தமர்களினால்தான் உலகில் மழை பெய்கிறது. இலங்கையை அடியோடு கடல் கொண்டு போய்விடாமல் கொஞ்சம் கொஞ்சம் கரையை இடிப்பதுடன் திருப்தியடைந்து நிற்கிறது. வாழ்க திரு சூரனார்! வாழ்க அவருடைய திருக்குலம்!இப்படிப்பட்டவர்களை ஆலயங்களில் விட மறுக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் மேற்படி அநீதியை நிவர்த்தி