பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

இலங்கையில் ஒரு வாரம்

சர்க்கார் கல்வி இலாகாவில் பார்லிமெண்டர் காரியதரிசியாக இருந்து வருகிறார்.

தமிழிலும் தமிழிசையிலும் ஸ்ரீ கனகரத்தினம் கொண்டுள்ள பேரபிமானம் இரருக்கும் தமிழ்நாட்டுக்குமுள்ள தொந்தத்தை வளர்த்து வந்தது. சென்னையில் நடந்த முதலாவது தமிழிசை மாநாட்டுக்கு வந்திருந்து கலந்து கொண்டார். பிறகு அநேகமாக ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இவரை ஸெண்ட்மேரீஸ் மண்டபத்தில் நடைபெறும் தமிழிசைக் கசேரிகளில் கண்டிருக்கிறேன். இவருடன் இவருடைய புதல்வியும் மருமகரும் கூடத் தவறாமல் வருவார்கள்.

இவ்வருஷம் மே மாதத்தில் கோவையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக்கழக விழாவிற்கு இவர் விஜயம் செய்து, அடுத்த தமிழ் விழாவை இலங்கையில் நடத்துமாறு அழைத்தார். “கஞ்சி வரதப்பா!” என்று கேட்ட்டதும் “எங்கே வரதப்பா?” விழுந்தோடிய பக்தனைப் போல் தமிழ் வளர்ச்சிக் க்ழகத்தரும் ஶ்ரீ கனகரத்தினத்தின் அழைப்பை ஒப்புக்கொள்ளத் தீர்மானித்தார்கள்.

இந்த செதி அறிந்ததும் ஶ்ரீ கனகரத்தினம் குதூகலம் அடைந்தார். இலங்கையில் உள்ள தமிழன்பர்கள் எல்லாருடைய கூட்டுதலையும் பெற்றுத் தமிழ் விழாவைப் பிரமாதமாக நடத்துவதென்று முடிவு செய்தார். ஶ்ரீ தூரனும் நானும் போயிருந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தின் அழைப்பை ஏற்றுப் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் அரசியலில் அவ்வளவாகக் கலந்துகொள்ளாத தமிழன்பர்களும் விஜயம் செய்திருந்தார்கள். ஆனாலும் இக்கூட்டத்தில் என்ன