பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

இலங்கை எதிரொலி


அதுதான் எங்கள் கழகத்தார் மாநாடு ஏற்பாடு செய்து ஏமாற்றமடைந்துபொதுமக்கள் மனப்புண்ணுக்கு ஆளான நேரம். இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தாரே இப்படி ஏதோ திராவிடத்திலிருந்து வருகிறார்கள் என்று வீண் புரளி செய்கின்றார்கள் என்று இன்று வரை நினைத்துக்கொண்டிருந்த சந்தேகத்தை இன்றோடு விட்டுவிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளுகின்றேன். மாநாட்டுக்கு நாங்கள் புறப்படுவதற்காக அவரவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டுப்போய் எல்லாரும் சென்னையிலே கூடியிருந்தோம். இங்கிருந்தும் விமானப் பிரயாண சீட்டுகள் வாங்கியும் அனுப்பியிருந்தார்கள். மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதுஎன்று எல்லா ஏற்பாடுகளும் செய்தானபிறகு, திடீர் என்று முந்திய நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு. எங்கள் விஸா மறுப்பு தாக்கீது கைக்குக் கிடைத்தது. திடுக்கிட்டோம். நிலைமையை டெலிபோனில் விளக்கினோம். அதற்கு குற்றவாளிகள் இலங்கை திராவிட முன்னேற்றக் கழத்தாரல்ல. எங்கள் அரசாங்கமும் தன்மேல் பழியை போட்டுக்கொள்ளாமல், உங்கள் இலங்கை அரசாங்கத்தின்மேல் பழியை சுமத்தி, இலங்கையில் அப்போது தேர்தல் நடந்துகொண்டிருப்பதால், குடியேற்ற வெளியேற்ற அதிகாரி, நீங்கள் இலங்கை வருவதை விரும்பவில்லை என்று சொல்லி தப்பிக்கொண்டது.

பிறகு இதே பிரச்சினையை டெல்லி பார்லிமெண்டில் வைத்தோம். நேரு அவர்கள் வழக்கமாக சொல்வதைப் போல் எனக்கொன்றும் தெரியாது என்று சொல்லியிருந்தாலும் கொஞ்சம் தப்பித்துக்கொண்டிருப்பார். திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் யாரும் இலங்கைக்குச் செல்ல அனுமதி கேட்கவில்லை, நாங்கள் மறுக்கவுமில்லை. என்று சர்வாதிகாரத் தொனியில் சொல்லிவிட்டார். பிறகு நாங்கள் அனுமதி கேட்டதையும், சர்க்கார் தந்த