பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

இலங்கை எதிரொலி


யேந்திய கடிதம் போய்ச் சேருவதற்குள் நேரத்தையும் மற்றெல்லோருக்கும் பங்கிட்டு அளித்துவிட்டார். அரசியலில் தான் எம்மவருக்குப் பங்கில்லையென்றால் நேரத்தில் கூடவா எங்களுக்கு பங்கில்லை என்று நினைத்துக் கொண்டோம். நேரம் சிறகில்லாப் பறவை. நேரம் சிக்கனமாக உபயோகிக்கவேண்டிய ஒரு அருமையான பொருள் தான். ஆனால் அந்த சிக்கனத்தை வெளிநாட்டிலே இருந்து வந்திருக்கிற எங்களிடத்தில் கையாண்டாரே என்பதற்காக வருந்துகிறோம்.

ஆகவே நாங்கள் இலங்கையில் கண்டதை கேட்டதை, எங்கள் பொதுச் செயலாளர் அண்ணா அவர்களிடம் சொல்லி இலங்கைக்கென்றே தனியாக திட்டங்களைத் தயார் செய்து விரைவில் அனுப்பும்படி ஏற்பாடு செய்ய இருக்கிறோம். இதற்காக இங்கே எங்களை அனுப்பிய அறிஞர் அண்ணா அவர்களுக்கும், பல கூட்டங்களை ஏற்பாடு செய்து தந்து எங்களோடிருந்து ஒத்துழைத்த இலங்கை தி. மு. க. நிர்வாகிகளுக்கும், இயக்கத்திற்கு பேராதரவு தந்த உங்களனைவர்க்கும், நாங்கள் இங்கே வந்து போக அனுமதி தந்த வெளியேற்ற குடியேற்ற அதிகாரிகளுக்கும், மற்ற எல்லா கட்சி தோழர்களுக்கும், எங்கள் சுற்றப்பிரயாண நிகழ்ச்சிகளின் முழு விபரங்களை ஈன்றமட்டில் வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும், சலிக்காது எங்களை சந்தித்து பல சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்துக் கொண்ட சந்தேகத் தோழர்களுக்கும் மற்ற அனைவருக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு நாளை காலை என் தாயகம் திரும்புகிறேன்