பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இலங்கை எதிரொலி


உயிரோடிருக்கும்வரையில் கிரேக்கத்தின் கீர்த்தி குன்றாது என்று ஏதன்ஸ் நாட்டார் எக்காளமிடுவதும், ரூஸோவின் ஜனநாயகக் கோட்பாடுகளும், வால்டேரின் எழுதுகோல் அளித்த வன்மைமிக்க கருத்துக்களும் இருக்கும்வரை ஒரு முடியாட்சியே தோன்ற முடியாது என்று பிரான்சு மக்கள் பெருமைபடுவதும், அட்லாண்டிக் மாகடலும், அமெரிக்க நாடும் இருக்கும்வரை கடற்தந்தை கொலம்பஸ் பெயரும் மறையாது என்று ஸ்பெயின் நாட்டு மக்கள் பெருமைப்படுவதும். கங்கைக் கரையும் மதுநீதியும் இருக்கும்வரை எங்கள் வளம் குன்றாது என்று ஆரியர்கள் அகங்களிப்பதும், காவிரியின் வற்றாத நீர் வளமும், வள்ளுவன் அளித்த குறளும், வேறு எம்மொழியின் படையெடுப்பாலும் அழியாத தமிழ் மொழியும் இருக்கும்வரை தமிழர்கள் மேன்மை குன்றாது என தமிழ் மக்கள் தன்னம்பிக்கைக்கொள்வதும், கண்டியும் கதிர்காமமும், தொன்னூறு மன்னர்கள் வழி வழியே ஆண்ட அனுராசபுரம் என்ற இடங்கள் இருக்கும்வரை சிங்களத்தின் செல்வாக்கு குறையாது என்று சிங்களத் தோழர்கள் செப்புவதும் எதனால்? அவரவர்கள் முன்னோர்கள் கண்டதை கேட்டதை செய்ததை கலைபுருவில் நமக்குக் காட்டியதாலன்றோ. அந்த கலை அழியாதிருக்க, கல்லிலும் கட்டையிலும் மலைகளிலும், குகைகளிலும் குடைந்து வைத்தது. எதனால் ? மக்களுக்கு பயன்படவேண்டுமென்ற எண்ணத்தினால் அல்லவா.

ஏன், ஒரு காலத்தில் கலையின் சின்னமாகவே கோயில்கள் விளங்கின. ஒரு காலத்தில் கோயில்கள் கலையை வளர்த்தது என்ற நிலையிலிருந்து இன்று கலை