பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

97




கோயில்களை வளர்க்கின்றது என்ற நிலைக்கு வந்திருக்கிறது. கலைக்கு இருப்பிடம் கோயில்கள் என்ற நிலைக்கு மாறாக கவலைக்கு இருப்பிடமாக மாறிவிடக்கூடாது என்பதே பல அறிஞர்களுடைய கவலை. கலை பொதுவானது. எந்த கலையும் யாரும், எந்த நாட்டாரும் ரசிக்க வேண்டுமென்ற நோக்கத்தாலேயே இதுவரை நடந்து வந்திருக்கிறது குறள் தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமாயில்லாமல் பதினெட்டு மொழிகளிலே மொழி பெயர்த்திருப்பதற்குக் காரணம், குறள் கருத்தின் கலையின்பால் மக்களுக்கிருந்த ஆர்வத்தை காட்டுகிறதன்றோ. அதேபோல் கலை மக்களுக்கு பொதுவாக பயன்படுகிற ஒரே காரணத்தினால்தான் உலகம் ஒரு நாளில் எவ்வளவு வேகமாக சுற்றுமோ அதைவிட வேகமாக உலகத்தை சுற்றிக்கொண்டிருக்கின்றது கலை. இந்தியாவில் எங்கேயோ ஒரு மூலையில் ஒலி பரப்பப்படுகிற கலையை அதே நேரத்தில் சிங்களத்தில் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இங்கிலாந்தில் பேசப்படுகிற அரசியல் கலையை அமெரிக்காவில் அதே நேரத்தில் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அமெரிக்காவில் பேசப்படுகிற பொருளாதாரக் கலையை அதே நேரத்தில் ஜெர்மனியில் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஜப்பானில் பேசப்படுகிற தொழிலாதாரக் கலையை அதே நேரத்தில் அகில உலகத்தாரும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். சீனத்தில் பேசப்படுகிற சமுதாயக் கலையை ஜெகமெல் லாம் கேட்டுக் கொண்டிருக்கும் என்றால் இது எதைக் கட்டுகிறது: கலை கலைக்காக இருந்தால் கடலில் எறிந்த கல்லைப் போன்றதாகும். கலை மேற்சொன்ன