பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

7


படைக்கப்பட்டவைதானே. அப்படியிருக்க ஏன் ஒருவன் ஒரு நாட்டிலிருந்து மற்றோர் நாட்டுக்குப் போகத் தடை என்பதையும் நீங்கள் தீர ஆலோசிக்கவேண்டும். ஆகவே மனித வர்க்கம் செம்மையாக வாழ வேண்டுமானால், ஆண்டவனால் இடப்பட்ட கட்டளைகள் என்று மனப்பாடம் செய்திருக்கிற உங்கள் உள்ளக்கிடக்கையைக் கடந்து நாம் அனைவரும் வெகுதூரம் செல்லவேண்டியவர்களாய் விடுகிறோம்என்பதையும் நம்மில் யாரும் மறுப்பதற்கில்லை.

ஆண்டவன் சொல்லியதாகச் சொல்லும் எதையும் நாம் கடைப்பிடிப்பதில்லை. அன்பாயிரு என்றார் கடவுள் என்று வைத்துக்கொள்வோம். இந்த தத்துவம் திருடனுக்கும் போலீஸ்காரருக்கும் இடையிலே நிலைநிற்குமா. திருடனிடம் போலீஸ்காரர் அன்பாயிருந்தால் பொருள் நஷ்டம் யாருக்கு. கொடியவனிடத்திலும் கொலைகாரனிடத்திலும் அன்பு காட்டுவதாயிருந்தால் மக்கள் அமைதியான வாழ்க்கையை நடத்தமுடியாதே. ஆகையாலே தான், ஆண்டவன் கட்டளைக்கு அப்பாற்பட்டதான பலவற்றை சமுதாயம் செய்யவேண்டி வந்ததால், எல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லிவிட்டோம். இதையாவது கடைசிவரையில் கடைபிடிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் எல்லாம் ஆண்டவன் செயல்தான் என்றால் நாங்கள் இப்படி பேசுவதும் ஆண்டவன் செயல்தானே, அதை மாத்திரம் நீங்கள் ஏன் ஒப்புக் கொள்வதில்லை. ஆகவே இந்த பிரச்சினைகள் இன்னும் உலக மக்களால் தீர்க்கப்படாத பிரச்சினை. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் நாம் முயன்றாலும் தீர்க்க முடியாத பிரச்சினை. இந்த சந்தேகம் தீர்க்கப்பட்டால்தான் உலகம் இரண்டாவது அடி எடுத்துவைக்கும் என்பது தேவைப்படாத பிரச்சினை. இந்த பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்புதான் நாங்கள் எங்கள் தொழில்களை கவனிப்போம்.