பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

9


அங்கே இருக்கும் தோட்டத் தொழிலாளிகளின் நிலமையைநேரில் உணர்ந்து, ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கின்றஇருபது கூட்டங்களில்கலந்துகொண்டு, இங்கே இருக்கும் பல்வேறு கட்சித் தலைவர்களேயும், இந்தியத் தூதுவரையும், பிரதமரையும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்து தரும்படி இலங்கை தி. மு. க. பொதுச்செயலாளரை கேட்டுக்கொண்டிருக்கின்றோம். எங்கள் சுற்றுப்பிர யாணமும் முடிந்து இறுதியில் விடைபெற்றுக்கொள்வ தற்காக கால்பேசில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்தில் எங்களுடைய முழுக் கருத்தையும், இலங்கையின் நிலமையும் விரிவாகச் சொல்லுகின்றோம் என்று உறுதிகூறி, எங்களை வரவேற்பதற்காக இந்த அடைமழையிலும் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கும் உங்கள் பேரபிமானத்துக்கு எங்கள் அன்பை ஈடாக்கி, நாங்கள் இங்கே வருவதற்காக பெருந் தொல்லைபட்டு கடைசியில் நீங்கள் தந்த பேராதரவால் முழு வெற்றியடைந்து மேலும் மேலும் நமக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்த இலங்கை தி. மு. கழக நிர்வாகிகளுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு என் உரையை முடிக்கின்றேன். வணக்கம்.

19–4–53

இலங்கை கிராண்ட் பாஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தார் நகர மண்டபம் வரையிலும் சுமார் நான்கு மைல் தூரம் பெரியதொரு ஊர்வலம் நடத்தி நகர மண்டபத்தில் தோழர் T. M. பீர்முகம்மது அவர்கள் தலைமையில் நடத்திய சொற்பொழிவின் சுருக்கம்!

குறிப்பு:-(இதுவரை இந்த மண்டபத்தில் இவ்வளவு கூட்டம் எப்போதுமே நடந்ததில்லையென்று இலங்கையில்