பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

15


பித்த எண்ணத்தை செலுத்தினால் இலங்கையை பொருத்த வரையிலும் நிச்சயமாக இலங்கைவாழ் திராவிடர்க்கு விடுதலை உண்டு என்பதிலே எனக்கு நம்பிக்கைத் தளரவில்லை. இனி ஒன்றுபட்ட மக்கள் சக்தியைத்தான் திரட்டிக் காட்டவேண்டியிருக்கிறது. பல கட்சிகளின் கூட்டுக் குரலை எழுப்பவேண்டியிருக்கின்றது. அந்த நிலை அடையுமா என்பதே சந்தேகத்துக்கிடமாயிருக்கின்றது. அந்த தொல்லையில் அகப்பட்டுக்கொண்டு அல்லல்படுவோர் அநேகமாக தமிழர்களாயிருப்பதால் இந்திய பிரதமருக்கும் கவலை இல்லை. இலங்கைப்பிரதமருக்கும் கவலையைக் காணோம். தென்னகத்தில் தீராத தொல்லைபட்டு இங்கேயாகிலும் வாழலாம் என்று இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு இங்கே குடி உரிமை மறுக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற இந்தியாவின் பிரதமரே இந்த சிக்கலைத் தீர்க்க மனமில்லாமல் இருக்கின்றாரே என்று நாங்கள் கவலைப்படவில்லை. அவர் அப்படித் தான் இருப்பார். இந்நேரம் திராவிட நாடு பிரிந்திருந்தால் ஆளுக்கொரு விமான டிக்கட்டை வாங்கிக்கொடுத்து நான் என் தாயகம் அழைத்துச் செல்வேன். திராவிடர்கள் மானமில்லாதவர்கள் அல்ல. எலாலன் படையெடுத்திருக்கிறான். கரிகாலன் படையெடுத்திருக்கின்றான். அந்த சந்ததியார்தான் அட்டைகளால் கடிக்க அரசியல் கடிவாளத்தில் பூட்டப்பட்டு முன்னுக்கும் போகமுடியாமல் பின்னுக்கும் வரமுடியாமல் செத்த சவ வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். உண்மையாகவே அவர்களை வெளியேற்ற சர்க்கார், வெளியேற்றஎண்ணுகிறதா இல்லை. குடி உரிமை வழங்குகிறதா, இல்லை. வெளிநாட்டிலிருந்து தொழிலாளிகள் உள்நாட்டுக்கு வர அனுமதிக்கிறதா இல்லை. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று விரோதமான நோக்கங்கள்தான்! வெளியேற்றவும் எண்ணவில்லை,