பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

19


தீப்பொறி பத்திரிகையிலே தோழர் ஜீவாவுக்குப்பதில் சொல்லும் முகத்தான், ‘ஜீவாவின் தாவா’ என்று எழுத கட்டுரையைப்படித்துவிட்டு ஆத்திரம் அடைந்திருந்தார்கள். அப்பேற்பட்டவர்கள் இன்று அவர்கள் இடத்தை உங்களுக்கு அளித்திருக்கின்றார்கள் என்றால், இதில் ஏதோ சூதோ சதியோ கலந்திருக்கவேண்டும் என்று சிலரும், உங்களை அவர்களிடத்திலே பேசச்செய்து கேள்விகள் கேட்கலாம் என்று ஏற்பாடுசெய்து வைத்திருக்கின்றார்கள் என்று சிலரும், இல்லை, இல்லை, அங்கே இருக்கின்ற கம்யூனிஸ்டு நண்பர்களிலே சிலர் பொறுப்பானவர்கள். ஆகையால் இடம் தந்தார்கள் என்று சிலர் சொன்னார்கள். இந்த மூன்று தரப்பார் சொல்லிய மூன்று விதக் கருத்துக்களைக்கேட்ட நான் தைரியமாக ஒரு முடிவுக்கே வந்துவிட்டேன். முதல் தரப்பார் சொன்ன சதியோ சூதோ செய்ய அழைக்கின்றார்கள் என்றபோது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆரியர் செய்த சதியிலேயும் சூதிலேயும் திராவிட சமூகம் சாகாமல் வளர்ந்திருக்கிறது. அப்பேர்பட்ட வைரம்பாய்ந்த திராவிட மக்கள் நீர்க் கொழும்பில் இருக்கின்ற சில கம்யூனிஸ்டு தோழர்கள் சதியாலும் சூதாலும் வீழ்ந்துவிடமுடியாது. அவ்வளவு பலவீனமானதல்ல திராவிட முன்னேற்றக்கழகம் என்ற முடிவுக்கு வந்தேன். ஏனெனில் நாம் வளர்த்த இயக்கத்தின் சக்தியை நாமே உணரவில்லையானால் இயக்கத்தில் நாம் முக்கியமான பங்கெடுத்தும் பயனில்லை என்ற கோட்பாடுடையவர்கள் நாம். ஒருவன் தன் சக்தியிலே அவநம்பிக்கைக்கொள்வானானால் அவன் பிற தீய சக்திகளை அழிப்பதொழிப்ப தெங்ஙனம் முடியும். ஆகவே கம்யூனிஸ்டு தோழர்கள் தங்கள் சக்தியின் தராதரத்தை எண்ணி பிறசக்திகளை அழிக்கலாம் என நினைப்பதைப் போலவே, நாமும் நம்மை அழிக்கவரும் தீய சக்தி எது