பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இலங்கை எதிரொலி


வானாலும் தடுத்து நிறுத்தலாம் என்ற நம்பிக்கையில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் தளர்ந்து விட்டதில்லை. பிறகட்சிகளை அழித்தால் தான் நம் கட்சி வளரும் என்ற கோட்பாடுடையதுமல்ல. பக்கத்து வீட்டை இடித்துத்தள்ளி அதில் கிடைக்கும் உடைந்த செங்கல்லையும் உளுத்துப்போன மரங்களையும் கொண்டே ஒரு வீடுகட்டுவதென்பது அவ்வளவு சிறந்ததென்று தி. மு. கழகம் நினைக்கவில்லை. ஆகவேதான் அது தனக்குவேண்டிய எல்லா சாமான்களையும் புதியதாக சேகரித்திருக்கிறது. ஆகையாலேதான் இந்த மரத்தை எங்கே வாங்கினர்கள். இந்த மரத்தைப்பற்றி சிலப்பதிகாரத்தில் சொல்லவில்லையே என்று சிலரும், இந்த செங்கல்லை எப்படி செய்து எங்கே சூளை போட்டீர்கள், இதைப்பற்றி ஜீவக சிந்தாமணியில் ஒன்றும் சொல்லப்படவில்லையே என்று சிலரும், உங்கள் கட்டிடத்தின் படமே புதியதாக இருக்கின்றதே, இது மார்க்கசிய சிந்தாத்தத்தில் காணப்படவில்லையே என்று சிலரும் வியப்படைகிறார்கள். ஏதாவதொன்றில் ஆதாரத்தைத்தேடி அதோடு இன்றைய நமது இலட்சியத்தை ஒட்டவைத்துவிட வேண்டுமென்று நினைப்பது பெரியவர்கள் சம்பாதித்து வைத்த சொத்தில் நாம் வாழவேண்டும் என்று நினைப்பதற் கொப்பாகும். அதனுல் தி. மு. க. தனது, திராவிடநாட்டு பிரிவினை கோரிக்கைக்கு மனுநீதியில், மாஸ்கோவில் மீமாம்சத்தில் ஆதாரம்தேடி அலையவில்லை.

இரண்டாவது தரப்பினர்கள் சொன்னார்கள், உங்களைக் கேள்விகள் கேட்கப்போகின்றார்கள் என்று, மிக மகிழ்ச்சிக்குறியது. நமது கழகமே கேள்விக்குறிதான். மனதில் எற்படுகிற சந்தேகங்கள் அனைத்துக்கும் என்ன விடை என்று இன்னும் கேள்விகேட்டவண்ணமே இருக்கின்றது.