பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

21


அப்படியே கேள்விகேட்பதானுல் என்ன கேள்வி கேட்டு விடப்போகின்ருர்கள். ஜீவாவைப்பற்றி ஏன் இப்படி எழுதினர்கள் என்று கேட்கப்போகின்ருர்கள். ஏன் எழுதக்கூடாது. கம்யூனிஸ்டு தோழர்கள் ஜீவாவை அறிமுகம் செய்துகொள்வதற்கு முன்பு நம் கூடாரத் திலே இருந்தவர். அந்த சொந்தத்தைப் பாராட்டிமாத் திரம் எழுதவில்லை. இந்திய அரசாங்க நடவடிக்கை களுக்கு பயந்துகொண்டு அவர் ஒராண்டு இதே இலங்கை யில் தலைமறைவாய் திரிந்தபோது எந்த கம்யூனிஸ்டு தோழரும் அவரை ஆதரிக்கவில்லை. அவர் அறிமுகம் இல்லாத காரணத்தால் திராவிட இயக்கத்தவர்கள்தான் ஆதரித்தார்கள். ஏன் இன்னமும் கொஞ்சம் வெள்ளை யாகச்சொல்லவேண்டுமானல், நான் அதை இங்கே சொல் லக்கூடாது. ஆனுலும் இப்போது அதை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் சொல்லவேண்டி வந்திருக்கின்றது. அதற்காக தயவுசெய்து யாரும் வருந்தவேண்டாம். தோழர் ஜீவா அவர்கள் தமது அஞ்ஞாதவாசத்தை முடித்துவிட்டுப் போகும் போது அளித்த ஆயிரம் ரூபாய் நன்கொடை திராவிட இயக் கத்தார் அளித்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த உரிமையைப்பாராட்டியும் நான் எழுதவில்லை. இன்னும் அவர் எங்களோடு நட்புமுறையிலே இருக்கின் ருர் என்பதற்காகவும் நான் எழுதவில்லை. அவர் எழுதியதற்கு பதில் எழுதவேண்டியது என் கடமை என் றெழுதினேன்.அதற்கும் பதில் தெரிந்துகொள்ள வேண்டு மென்ற தர்க்க நோக்கத்தோடு எழுதினேன், இன்னமும் அந்த பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன். வாதப் பிரதிவாதங்கள் எழுகிறபோது வரன்முறைகளையும் சொந் தத்தையும், சிநேகிதத்தையும் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. 'நீதி வேண்டுமானல் நட்புக்கு விடை கொடுத்