பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இலங்கை எதிரொலி


ஆகிய இரண்டு வசதிகளும் இல்லாமலே நமது கழகம் வளர்ந்திருக்கின்ற வேகத்தைப் பார்த்து இலங்கையில் பண பலமும் பத்திரிக்கை பலமும் இருந்தும் வளராத கட்சி ஆச்சரியப்படுவதில் வியப்பில்லை. ஆகவே நமது கழகம் வளர்ந்ததற்கான காரணம், விருப்பம் நல்லது. விறுவிறுப்பாக எழுதும் எழுத்தாளர்கள், வேடிக்கை, விவா தம் வரலாற்று நுணுக்கம். நிலநூல், அரசியல் சமூக இயல், ஆகியவைகளை நிறைய படித்துப் படித்து பயிற்சி பெற்றிருக்கின்ற திறமைவாய்ந்த நல்ல பேச்சாளிகள். வல்லமையும் ஒற்றுமையும் மிகுந்த தொண்டர்கள், சட்ட திட்டங்கள், அமைப்புமுறை, ஜனநாயக நடை ஆகியவைகளைக்கொண்டு இயங்கிக்கொண்டு வருகின்றது. மேற் சொன்னவைகளில் எதுவும் பழுதுபடாமல் பார்த்துக் கொள்ளுகின்றவர் பேராற்றல் மிக்க நமது அண்ணா. ஆகவே நமதியக்கத்தின் குறிக்கோளான திராவிட நாடு திராவிடர்க்காகும் வரை நாம் ஓய்ந்திருக்கமாட்டோம், நீங்கள் ஓய்ந்திருப்பீர்கள் என்றும் காணவில்லை. ஆகவே உங்கள் தனியாத வேட்கையை நான். மிக மிகப் பாராட்டி என்னை இங்கே பேசச்செய்த நீர்க்கொழும்பு திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனைய தோழர்களுக்கும் குறிப்பாக கம்யூனிஸ்டு தோழர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டு என் உரையை முடித்துக் கொள்கின்றேன், வணக்கம்.

24-4-53 இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான கண்டி உந்துவண்டித் திடலில் நடந்த மாபெரிய பொதுக்கூட்டத்தின் பேச்சுச் சுருக்கம்:-

குறிப்பு-சுமார் பத்தாயிரம் பேர்கள் ஜோ வென்று கொட்டும் மழையில் குடைகளைப் பிடித்துக்கொண்டு வியப்