பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

33


ஆக பழக்கினான். அந்தவகையில் அவன் தேர்ந்தெடுத்தது மூன்று பிராணிகள். எருமை, மாடு, குதிரை இவைகளின் மேல்தான் எறிச்சென்றான். இதற்கிடையில் அவன் ஏற்படுத்திக்கொண்டிருந்த பெண் தொடர்பால் வளர்ச்சியடைந்த குடும்பம் ஆகியவற்றை அழைத்துச் செல்ல நினைத்தான். அதன்பயனாக ஒரு வண்டியைச் செய்து அதன் கழுத்தில் சுமத்தி தானும் தன் மனைவி மக்களுமாகச் சென்றான். இந்த சவாரியோடு வெறும் மனப்புரட்சி மறைகிறது. பிறகு அந்த மனப்புரட்சி நீராவிப் புரட்சியோடு நட்புகொள்கிறது. நீராவியின் வேகத்தை இன்னும் அதிகமாக்க வேண்டுமென்று கருதிய விஞ்ஞானிகள் மின்சார இயக்கத்தைக் கண்டார்கள். அதன் பலனை இன்று நேரடியாக அனுபவித்து வசதியையும் பயனையும் பெறுகிறோம். ஆகவே மனிதன் தனக்கிருந்த அறிவு சக்தியால் எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கின்றான் என்பதை நாம் மறந்துவிடாவண்ணம் பழைய இரட்டைமாட்டு வண்டிகள் ஒருபுறமும் ஆகாய விமானங்கள் மற்றோர் புறமும் வேலை செய்துக்கொண்டிருக்கின்றன. ஆனுல் இரண்டின் பயன் வெவ்வேறாக இருக்கின்றது. காலம்மாற மாற மனிதன் தேவைகள் அதிகரித்தபடியுள்ளது. ஒரு காலத்தில் மன்னனை ஆண்டவன் என மக்கள் சமுதாயம், ஒப்புக்கொண்டது. பிறகு மன்னன் ஆண்டவனுமல்ல, ஆண்டவனுடைய பிரதிநிதி என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தது. பிறகு கொஞ்சம் விழிப்புற்ற மக்கள் மன்னன் ஆண்டவனுமல்ல ஆண்டவனுடைய பிரதிநிதியுமல்ல, நாட்டின் தலைவன் என்ற அளவோடு நிருத்திவிட்டது. இறுதியில் மன்னனுக்கு இருந்த அரசியல் விவேகத்தையும் ஆட்சிமுறையையும் பல பேனா வீரர்கள் மக்களுக்கு எழுதி காட்டிய

3