பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

இலங்கை எதிரொலி


தால், மன்னனை ஒழித்து மக்களாகவே ஆளத்தொடங்கினார்கள். இன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நாட்டில் தவிர வேரெங்கேயும் மன்னராட்சியில்லை. பிரிட்டனில் மகாராணியார் ஆட்சி என்று பெயரளவுக்கு இருக்கின்றதேயன்றி நடைபெறுவதெல்லாம் முழுக்கமுழுக்க மக்களாட்சிதான் என்று சொல்லிவிடலாம்.

ஆங்கில நாட்டில் மன்னர் கைக்கு விலங்கிட்டு மக்களுக்கு சுதந்திரமளித்திருக்கின்றார்கள் என்று பிரஞ்சு நாட்டுவரை கோல்வேந்தன் வால்டேர் சொல்வதைபோல் பெயரளவுக்கு வைத்திருக்கின்றார்கள். அதுவும் இந்த எலிஜிபெத் மகாராணியாரோடு தேம்ஸ் நதிக்கறையில் முடியாட்சி முடிந்துவிடும் என்று பல அரசியல் தலைவர்கள் இப்போதே விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கின்றார்கள். ஆனால், மன்னராட்சியிலேதான் கொடுமைகள் நிறைந்திருந்தன. இப்போது நடக்கும் மக்கள் ஆட்சியில் யாருக்குமே எந்தவிதமான தொல்லையும் இல்லை என்று சொல்விடமுடியாது. மன்னர்கள் இருந்தபோது செய்த கொடுமைகளைவிட, மக்கள் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு மறைமுகமாக பல கொடுமைகளைச் செய்துக் கொண்டிருக்கின்றனர் இப்போதிருக்கும் தலைவர்கள். அரசியல் அதிகாரமெனும் வேலால் குத்தி விலாவைக் கொத்துகின்றார்கள். இதன் பொறுப்பு ஒரு தனிப்பட்ட மன்னன்மேல் சுமத்தமுடியாமல் பெருவாரியான மக்களின் பிரதிநிதிகளால் செய்யப்பட்ட சட்டங்கள். அதுவும் இது ஜனநாயகம். ஆகவே அனைவரும் கீழ்ப்படிந்தே தீரவேண்டும் என்று குழப்பி குற்றவாளிகள் நேரடியாக அகப்பட்டுக்கொள்ளாமல், மக்கள் அறியாமையால் அளித்த வாக்குச் சீட்டுப்பெட்டியில் மறைந்துக்கொள்கின்றார்கள். மன்னராட்சியாயிருந்தாலும், மக்கள் ஆட்சி பொதுவாகக் கிடைக்கவேண்டிய உரிமைகள் வசதிகள்