பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

37


இந்த முறையிலேதான் இன்றைய இந்திய சுதந்திர ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது. இந்த கொடுமையை சகிக்காத திராவிட மக்கள்தான் கொடுமைகளை புள்ளி விபரங்களோடு காட்டிக்காட்டி பிரிவினையை வேண்டுகிறது. முன்னைய ஆட்சிக்கும் இன்றைய ஆட்சிக்கும் உள்ள வேறுபாட்டை கணக்கு விபரங்களோடு காட்டியிருக்கிறது. பிரிவினை வேண்டாமென்று சொல்ல அவர்களுக்கு ஆள்பலமும் சட்டபலமும் இருக்கலாம். ஆனுல் நீதி பலமில்லை. அந்த காரணத்தால்தான், திராவிட நாட்டுப் பிரிவினைக்கோரும் எங்களைப்பார்த்து, வகுப்பு வாதிகள், நாத்திகர்கள் குறுகிய மனப்பான்மையுடையவர்கள், அரசியல் கண்ணோட்டம் இல்லாதவர்கள் என்றெல்லாம் பழிசுமத்துகிறார்கள். இவையெல்லாம் தகுந்த காரணங்களாகவோ, சரிக்கக்கூடிய மருந்தாகவோ இருக்கமுடியாது. நாங்கள் நாத்தீகர்களானால் கோபித்துக்கொள்ள வேண்டியவர் கடவுள்! இவர்களல்ல. நாங்கள் வகுப்புவாதிகள் என்றால் கோபித்துக்கொள்ள வேண்டியவர்கள் வகுப்பின் உச்சியிலே உட்கார்ந்துகொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் உயர் ஜாதிக்காரர்கள் டெல்லி பாராளுமன்றமல்ல, குறுகிய மனப்பான்மையுள்ளவர்கள் என்றால் விரிந்த மனப்பான்மையாக்க நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி என்ன, அல்லது உங்களுக்கிருக்கும் தாராள மனப்பான்மை எந்த அளவு. என்பதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் காலத்தில், ஒரு கொடுமையைப் போக்க சமுதாய முன்னேற்றத்தில் கவலை கொண்டவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி என்ன. இந்த குற்றங்களை நாம் மாத்திரம் கண்டிக்கவில்லை. இங்கே வந்து சென்ற பல அறிஞர்கள். இங்கேயே தங்கள் ஆதிக்கத்தை வாணிபத்தில் தொடங்கி செங்கோலில் முடித்த சீமையர்கள். அமெரிக்காவிலிருந்து வந்துபோன மேயோ இன்