பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

இலங்கை எதிரொலி



தலைவர் எழுந்து நான் சொன்னதற்காக தோழர்கள் வருந்தக்கூடாது. என்னை தலைமைவகிக்கக் கேட்டபோது நான் இதையே வற்புறுத்தினேன். என்னிடம் வந்த நண்பர்கள். தமிழன் மேன்மை என்பதைப்பற்றிப் பேசும்படிக் கேட்டுக்கொள்ளலாம் என்றனர். சரி என்றேன். ஏனெனில் நான் ஒரு உயர்தர பள்ளித் தமிழாசிரியன் என் வேலைக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதே என்பதற்காக ஆகவேதான் நான் இப்படி சொல்ல நேர்ந்தது. ஆகவே தோழர்கள் மன்னித்து, என்பொருட்டு, தமிழன் மேன்மை என்பதைப்பற்றிப்பேசி என்னையும் இங்குக் கூடியிருக்கும் தோழர்களையும் பெருமைபடுத்துவார்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். என்று சொல்லி அமர்ந்தார்

தொடர்ந்து சிற்றரசு

தலைவரும் தோழர்களும் இவ்வளவு சுற்றி வளைந்து வந்திருக்க வேண்டிய வேலையே இல்லாமல், விளம்பரம் செய்கிறபோதே இன்னின்னார் இன்னின்ன பொருள்களைப் பற்றிப் பேசுவார்கள் என்று விளம்பரப்படுத்தி அந்த துண்டு அறிக்கை ஒன்றை எங்கள் கையில் கொடுத்திருந்தால் போதும்.

ஏதோ சுட்டிக் காட்டமுடியாத காரணத்தால் தமிழன் மேன்மை என்ற பொருள்பற்றிப் பேசும்படி கேட்டுக் கொள்ளாமல், தமிழன் மேன்மை என்ற பொருள்பற்றிப் பேசச் செய்திருப்பது சுற்றிலும் தேயிலைத் தோட்டங்களைக் கொண்டுள்ள இந்த பண்டாரவளைக்கு மிகப் பொருத்தமானதாகும். ஏனெனில் இங்கே தமிழின் மேன்மை இருக்கும் அளவுக்கு தமிழன் மேன்மையில்லை. தேயிலைக் கிள்ளும் தமிழ்ப் பெண், அதற்கு பாதை வகுத்துக் கொடுக்கும் தமிழன், எடுபிடி வேலைகளைச் செய்யும் தமிழ்ச் சிறுவன் ஆகியோருக்கு தமிழின் மேன்மை எந்த அளவுக்கு