பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

இலங்கை எதிரொலி



களுடைய ஆராய்ச்சியில் அடங்காமலே இருக்கின்றது. அதனுடைய பொலிவையும் திறனையும், திருவையும் பார்த்து சிலர், சிவனார் அருளினார் என்னும், சிலர் குடமுனியருளிப் போந்தார் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். அதனால் நமக்கு பொறாமையில்லை. மாறாக அச்சம் வளர்கிறது. ஏனெனில் ஆண்டவனால் கொடுக்கப்பட்டதாகச் சொன்ன மொழி உலகத்திலேயே அதுவும் இந்தியாவிலேயே ஒரே ஒரு மொழிதான். அது வடமொழி என்று நம்மால் அழைக்கப்படும் சமஸ்கிருதம். அது இப்போது வழக்கிலில்லை. செத்த மொழியாய்விட்டது, பேசுவாரில்லை. சில வரிகள் பாடலில் படிப்பார் தவிர இலக்கண இலக்கியமில்லை. அதனாலேதான் இந்தியைக் கடன் வாங்கியாவது உயர்பிழைக்கலாமா என்று துணிந்திருக்கிறது. உயிர்போகும் நிலையில் அது அப்படிச் செய்வது தவிர வேறு வழியில்லை. ஆனால் அதிலிருந்து நாம் பெறும்பாடமென்ன. ஆண்டவன் கொடுத்தமொழி. அதுவும் எந்த இடத்திலே கொடுத்தான். பாண்டவர்களும், கெளரவர்களும் குருதிக் கொட்டிக்கொண்டிருந்த குரு க்ஷேத்திரத்தில் கடவுள் கண்ணனாக வந்து காண்டீபனுக்குச் சொன்ன கீதைமொழி என்றல்லவா சொல்லப்படுகிறது. இந்த கீதைமொழியா இப்படி சீதையின் நிலை அடையவேண்டும் என்பதை சிந்திக்கவேண்டும். ஆகவே தான் ஆண்டவனால் கொடுக்கப்பட்ட மொழிக்கு இவ்வளவு ஆபத்து இருக்கின்றதென்று தமிழாசிரியர்களுக்கு, அதுவும் குறிப்பாக சைவச்சீலர்களுக்கு அவ்வழி செல்லாதீர் என்று தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ் பிற மொழி கலவாமல் பேசலாம். ஆனால் கலவாமல் இல்லை, ஏன் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களோடு பழகுகின்றோம். அதன்காரணமாக பலமொழிச் சொற்கள் நம் மொழியோடு கலந்துவிடுகின்றன. பல சொற்கள் பிற்கால