பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

49



போகும் வரையில் நம்மை விடப்போவதில்ல். ஒரு குறிப்பிட்ட கட்சியிலே இருப்பவன்தான் அரசியல்வாதி என்பதில்லை. வரி செலுத்துபவனும், சட்டங்களை கற்றுணர்ந்து வழக்குகளுக்கு வாதாடும் வழக்கறிஞர்களும், நீதிதரும் அதிபதிகளும், சர்க்கர் தரப்பில் சாட்சி சொல்லும் ஒரு சாதாரண மனிதனும், ஏன் இங்கே தேயிலையைக்கிள்ளும் ஒவ்வொரு தொழிலாளியும் அரசியல்வாதிதான். வேண்டுமானால், நாம் அரசியல்வாதிகளா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அவர்களுக்குப் பதிலாக நாமே சிந்தித்துப் பார்ப்போம். தேயிலைக் கொழுங்தை ஏன் கிள்ளுகிறார்கள். வெளிகாட்டுக்கனுப்ப, வெளிநாட்டுக்கு அனுப்பினால் முதலாளிக்கு அதன் விலைவரும். அதனால் சர்க்காருக்கு ஏற்றுமதி வரி வரும், அதனால் சர்க்கார் சக்கரம் சுழலும். இப்படியேதான் ஒருவனுக்கு ஏற்படுகிற வயிற்றுவலி வயிற்றுப் போக்குக்கூட சர்க்காருக்கு சம்மந்தப்பட்டு வருகிறது. இங்கே மலஜலம் கழிக்காதே’ என்ற அறிவிப்பு இருக்கும். அந்த இடத்தில் அவன் உட்கார்ந்துவிடுகிறான், மேலும் இரண்டடிகள் போக முடியாத வயற்றுக்கோளாறின் காரணத்தால். உடனே கைது செய்யப்பட்டு விடுகிறான் அபராதம். அல்லது தண்டனையடைகிறான். இது அவன் அறியாமல் செய்த குற்றமென்றோ, அறிந்தும் தாளமுடியாமல் செய்த குற்றமென்றோ நாம் சிந்திக்கத் தேவையில்லை என்றாலும், எப்படியோ அவன் செய்கை அரசியலுக்கு சம்மந்தப்பட்டுவருகிறது. நீக்ரோக்களும். எஸ்கிமோக்களுங்கூட காடுகளில் திரிந்துகொண்டிருந்த காலம் வரையில்தான் அரசியலைப்பற்றி கிந்திக்காமல், அதைப்பற்றி பேசாமல் இருந்தார்கள். இன்று அவர்