பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இலங்கை எதிரொலி


களும் அகில உலக அரசியல் அரங்கில் ஒரு இடத்தைப் பெற்றுவிட்டார்கள். ஒரு காலத்தில் அரசியலைப் பேசாமல் காடுகளிலே திரிந்துகொண்டிருந்த, நீக்ரோ அரசியல் பேசிய பிறகு நீதிபதியாக வீற்றிருக்கின்றான் அமெரிக்காவில். அங்கே அரசியலைப் பற்றிப் பேசுவது நன்மை. இங்கே அரசியலைப்பற்றிப் பேசுவது தொல்லை என்கிறார். தலைவர். இது. நாட்டின் குற்றமேயன்றி வேரில்லை. ‘அரசியலைப்பற்றிப் பேசாதே’ என்பதற்குப் பதில் அரசியலில் இன்னன்ன பொருள்பற்றிப் பேசு என்று எல்லை வகுத்திருக்கலாம். ஜனநாய்கமும் சர் வாதிகாரமும், முடியாட்சியும் குடியாட்சியும், மக்கள் சர்வாதிகார ஆட்சியும், நாட்டு நிலையும், சர்க்காரும் சட்டங்களும், ‘சர்க்கார் குரலும்’, தனி மனித சுதந்திரமும் என்பன போன்ற பொருள்களில் ஏதாவதொன்றைப் பேசும்படி பணித்திருக்கலாம், அப்படி ஒன்றையுமே செய்யாமல் பேச்சாளிகளை சோதனைக்குள்ளாக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். வணக்கம்.

நாவலபிடியாவில், தமிழர் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பாக தோழர் கதிரேசன் B. A. அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு.

குறிப்பு: இராமாயண பிரியர்களும், சைவச்சமயத் தோழர்களும், கல்லூரி மாணவர்களும், கற்றறிந்தோரும் அதிகமாக கூடியிருந்த கட்டம் இது. இதில் பேசப்பட்ட பொருள் இராமாயணத்தைப்பற்றியதாகும்.

அருமைத் தலைவர் அவர்களே! - அன்புள்ள தோழர்களே! மதிப்புக்குரிய தாய்மார்களே வண்க்கம்.