பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

51


சங்ககாலத்தின் அமைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று மனதிலே கற்பனை செய்து பார்த்தால் அது தலைச்சங்கமாயினும் இடைச்சங்கமாயினும் கடைச்சங்கமாயினும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு பேராசிரியர்களையும். மதத்தலைவர்களையும், சைவப் பெருமக்களையும், கல்லூரி மாணவர்களையுமே அதிகமாகக் காண்கின்றேன். களிப்பெய்துகின்றேன். இவ்வளவு சிறந்த சிந்தனைவாதிகள் இடையே இன்று நாட்டிலே பலர் நாவில் நடமாடிக் கொண்டிருக்கும் இராமாயணத்தைப்பற்றியும், எம் மதமும் இம்மதத்துக்கு ஈடாகாதெனும் சைவச் சீலர்கள் தழுவிவரும் சிவ மதத்தைப்பற்றியும் தர்க்க நோக்கத்தோடு ஆராய்வதற்கொப்பான நல்ல இடம் இதுதான் என்று நான் கினைப்பது மாத்திரமல்ல, எனது அருமை நண்பரும், கண்டி கல்லூரி தலைவரும், இக்கூட்டத்தின் தலைவரும், உங்கள் உள்ளம் நிறைந்த அன்புக்கு அருகதையானவருமான தோழர் கதிரேசன் அவர்கள் சொன்னதும் அது தான்.

ஆகவே அந்த இரண்டு பொருள்களைப்பற்றி நான் பேசத் தொடங்குமுன் உங்களை நீங்கள் ஏதோ ஒரு சட்டசபையில் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக நினைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் சட்டசபையை விட இதைக் கொஞ்சம் அமைதியாகவும் அருமையாகவும் கடத்தலாம். ஏனெனில் சட்டசபையில் புகாத பிரச்சனைகளே இல்லை. ஆனால் இங்கே கண்ட கண்ட பிரச்சனைகளுக்கு இடமில்லை. நாம் நம்பும் ஒன்றைப் பற்றிப் பிறரைப் பேசச் செய்து செவி குளிர கேட்டுப் போவதுதான். உலகத்தின் எந்த கோடியிலும் உள்ள