பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

53



அறுபட்ட வால்கள், ஆகிய எவற்றிற்குமே ஆதாரங்கள் இல்லை. எங்கேயோ ஒரு இடத்தில் சீதையின் காலடி. இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் ஒரு கற்பாறையின் மேலே. கற்பாறையின் மேலே கால் வைத்தால், காலடிகள் படருமா? அப்படி படரும் அளவுக்கு இருந்ததென்றால் சீதை செம்பலான உருவமா, இரும்பாலான உருவமா, எஃகுவாலான உருவமா, இந்த உலோகங்களால் சிலை செய்து கற்பாறையின் மேல் வைத்தாலும் இன்றளவும் தெரியுமளவுக்கு காலடிகள் படர முடியுமா? அப்படியே படர்ந்திருந்தாலும், கம்பன் எப்படி இவ்வளவு கடினமான உருவத்தை மனமுவந்து மெல்லியலாள் என்று வர்ணித்திருப்பான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இராமாயணத்தை மக்கள் பாராயணம் செய்தால் உடன்பிறந்த வாஞ்சை வளரும் என்று சொல்லப்படுகிறது. உண்மை தானா? பரதனுக்கே பட்டமளிப்பதாக வாக்களித்திருந்தான் தசரதன் தன் மூன்றாவது மனைவியாகிய கைகேயிக்கு. கேகய நாட்டு மன்னன் தசரதனுக்கு தன் பெண்ணைக் கொடுக்கும் போதே இந்த வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தான். பெண்ணும், ஆணும் யுக்த வயதா இல்லாத பல திருமண ஏற்பாடுகளிலே இந்த மாதிரி ஏதாவதொரு நிபந்தனையின் பேரில்தான் பெண்கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு பெற்றோர்கள் வந்து விடுகின்றார்கள், கேகயக் கோனுக்கு தசரதன் மருமகன் ஆவது மட்டில்லா மகிழ்ச்சிதான். எனினும் மருமகன் வயோதிகன். இறப்பின் சமீபத்திலே நிற்கின்றான். அவனுக்குப் பெண்ணேக் கொடுத்தால் பிள்ளைகள் பிறக்குமா என்றுகூட அவன் நினைக்கவில்லை. அறுபதினாயிரம் மனைவிகளைக் கட்டிக்கொண்ட தசரதனுக்கு இவ்